Header Ads



டுபாய் பொலிஸ் ரோந்து பணிகளுக்கு பெராரி + மெர்செடெஸ் சொகுசு கார்கள்


இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்பார்கினி, தனது 50 ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 'அவென்ட்டடார்' என்ற அதிநவீன காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லம்பார்கினி அவென்ட்டடார் காரின் விலை 5 வட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி).

லம்பார்கினி கார்களை அடுத்து 'ஃபெராரி' கார்களை வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான 'ஆஸ்டன் மார்ட்டின்', 'பெண்ட்லி', 'மெர்செடெஸ்' ஆகிய சொகுசு கார்களையும் வாங்கி போலீஸ் ரோந்து வாகனங்களின் வரிசையில் இணைத்துள்ளனர்.

இவற்றில் ஃபெராரி கார்களை பெண் போலீசார் மட்டுமே ஓட்டுவார்கள் என துபாய் போலீஸ் துறையின் தலைவர் கடந்த மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது செல்வ செழிப்பை சுற்றுலா பயணிகளுக்கு காட்டும் வகையில் போலீஸ் ரோந்துப் பணிக்கு இந்த கார்களை பயன்படுத்த துபாய் அரசு தீர்மானித்துள்ளது.

குற்றம் செய்பவர்களை விரட்டிச்சென்று பிடிப்பதை விட, விமான நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இந்த கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒய்யார பவனி வரும் என கூறப்படுகிறது. 

1 comment:

  1. எனக்கு மிக நீண்ட நான் சந்தேகம் இந்த கார்களுக்கும் அதன் சில்லுகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி எல்லா விளம்பரங்களிலும் இரண்டும் ஒன்றாக

    ReplyDelete

Powered by Blogger.