'பலஸ்தீனர்களுக்கு சுதந்திரம் கிடைக்க இலங்கை அளித்துவரும் ஆதரவு மகத்தானது'
கடந்த 65 வருடங்களாக சுதந்திரத்துக்காகப் போராடிவரும் பலஸ்தீன மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் இன்றும், அகதிமுகாம்களில் மிகப் பரிதாபகரமான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகா கூறினார்.
பலஸ்தீன அல் நக்பா தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலேஅவர் இதனைத் தெரிவித்தார்.
ஒருகோடியே 60 இலட்சம் பலஸ்தீன மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் நாட்டுக்குள்ளும் லெபனான்,சிரியா போன்ற நாடுகளில் மிகப் பரிதாபமானமுறையில் வாழ்க்கை நடாத்திவருகிறார்கள்.
பலஸ்தீனர்களுக்கு உலகநாடுகளின் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. ஆனால்,அமெரிக்க நிர்வாகம் பலஸ்தீனர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு தடையாக செயற்பட்டு வருகின்றது.
பலஸ்தீனர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக இலங்கை அளித்துவரும் ஆதரவு மகத்தானது.
இலங்கையைப் போன்று ஏனைய நாடுகளும் எமக்கு ஆதரவுவழங்க முன்வரவேண்டும். மிகவிரைவில் சுதந்திர பலஸ்தீன் உருவாகும் என்ற நம்பிக்கையிலே நாம் வாழ்ந்து வருகின்றோம். அமெரிக்காவின் மத்தியஸ்துடன் நடத்தப்படும் பேச்சுவார்ததைகளில் நாம் ஏமாற்றப்பட்டுள்ளளோம். இஸ்ரேலியர்கள் எமது உயிருடன் விளையாடுகிறார்கள்.
Post a Comment