Header Ads



'பிள்ளைகளுக்கு படிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை'

(எம்.பைஷல் இஸ்மாயில்)

பிள்ளைகளின் நாளாந்த கல்வி நடவடிக்கையில் பாடசாலையில் நடைபெறும் நாளாந்த பயிற்சிகளை குறித்த தினத்தில் குறித்த பாடங்களை வீட்டில் செய்துவரும் இந்த பலக்கத்தை தினமும் செய்துவரும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வசதி வாய்ப்பை செய்து கொடுப்பது பெற்றோர்களாகிய நமது கடமையாகும். என்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டின் கீழ் கடந்த வருடம் புலமைப் பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளை பாராட்டி கொளரவிக்கும் நிகழ்வு இன்று (2013.05.28) பாலமுனையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தவிசாளர் அன்ஸில் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

உங்கள் பிள்ளையின் தினப்பதிவேடு, முன்னேற்றப்பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஒப்பமிடுதல், பிள்ளை சரியான நேரத்திற்கு பாடசாலைக்குச் செல்கின்றதா என்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்ற அதேவேளை, பாடசாலைக் கல்வி செயற்பாடுகளில் பிள்ளைகள் எந்தளவு பயிற்சிகளை செய்துள்ளது, ஆசிரியர்களினால் கொடுக்கப்பட்ட வீட்டு செயற்பாடு மற்றும் பயிற்சி என்பனவற்றை அறிந்து வைத்திருத்தல் அவசியமானதாகும். 

சில மாணவர்கள் பரீட்சை எழுதம் காலப்பகுதியில் மட்டும் அன்றிரவு முழுமையாக கண் முழித்து அடுத்த நாள் நடைபெறும் பாடத்தை படிப்பதும் இதனால் குறித்த தினம் நடைபெரும் பரீட்சையில் தூக்க மயக்கத்துடன் பரீட்சையை எழுதிவிட்டு வரும் செயற்பாடுகள் யாவும் தவிர்க்கப்படவேண்டும். பாடசாலைக் கல்வி நடவடிக்கையின்படி மூன்று தவணை முறையில் பரீட்சை நடைபெறுகின்றன. அதில் தம்பிள்ளை முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணை அடிப்படையில் எந்தளவு புள்ளிகளை பெற்றுள்ளது. என்பது தொடர்பாக பெற்றோர்களாகிய நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அத்துடன் அதற்கமைவாக நம்செயற்பாடுகளை மாற்றியமைத்து பாடசாலையில் தினம்தோறும் நடைபெறும் பாடங்களை குறித்த அதே தினத்தில் வீட்டில் கற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தினமும் பெற்றோர்கள் தம்பிள்ளையின் பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்தால் தனியார் கல்வி நிலையத்துக்கு கல்விகற்க அனுப்பவேண்டிய ஒரு அவசியம் தேவையில்லை என்றுதான் நான் கருதுகின்றேன். இந்த முறையில் பிள்ளைகளை செயற்பட வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் எமது நாட்டில் ஒரு சிறந்த அறிவாற்றல் உள்ள பிரஜையாகவும், கல்விமானாகவும் திகழ்வார் என்பதில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமே இல்லை. உங்களது பிள்ளைகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதும் இன்றைய காலத்தின் தேவையாகும். 

மாணவர்கள் மேலதிக கல்வி கற்றல் நடவடிக்கைகளுக்காக தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்படும் வேளையிலும் பெற்றோர்கள் அவர்களுக்கான ஒத்துழைப்பு வழங்கி வருவதுடன், மேற்பார்வை செய்து வருவதும் அவசியமானது. என்றார். 

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் அமைப்பாளர் ஐ.எல்.சுலைமாலெப்பை, செயலாளர் எம்.ஏ.சதாத் மற்றும் உறுப்பினர்கள் என பல நூற்றுக்கணக்காண பெற்றோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.