டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மாணவன் வபாத்
(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோய் மீண்டும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இன்று (29.05.2013) வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.
வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளி வாயல் குறுக்கு வீதியில் வசிக்கு அப்துல் ஸலாம் ஸைபுல் இஸ்லாம் (வயது – 09) இவர் கடந்த சனிக் கிழமை (25.05.2013) காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கள் கிழமை (27.05.2013) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இச் சிறுவன் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி அச் சிறுவன் இன்று காலை உயிர் இழந்துள்ளார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் காலை 09.30 மணியளவில் உயிர் இழந்துள்ளார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteயா அல்லாஹ்! இவருக்கு அருள்புரிவாயாக. உயர்ந்த சுவனபதியை இவரின் தங்குமிடமாக ஆக்குவாயாக. பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளத்தில் பொறுமையை ஏற்படுத்துவாயாக.
''நிச்சயமாக அல்லாஹ் அளித்ததும் அவனுக்குரியதே. அவன் எடுத்ததும் அவனுக்குரியதே. அவனிடம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு தவனையுண்டு. எனவே, பொறுமை செய்வீராக, நன்மையை எதிர்பார்ப்பீராக'' (புகாரி)