உலகில் குறைவாக சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கம்
உலகில் சம்பளம் மிகவும் குறைவாக வழங்கப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. சர்வதேச பூகோள சம்பள முரண்பாட்டு அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
75 நாடுகளில் சம்பளம் வழங்கப்படும் முறைமை தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து நாடுகள் மிகவும் மோசமான முறையில் ஊழியர்களுக்கு சம்பளங்களை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அல்ஜீரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளே இவ்வாறு மோசமான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிகச் சிறந்த வகையில் சம்பளங்களை வழங்கும் நாடாக சுவிட்சர்லாந்து திகழ்கின்றது. gtt
Post a Comment