வடமேல் மாகாண சபை - யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு விழா
(இக்பால் அலி)
வடமேல் மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருநாகல் நகரில் வெலகெதர விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபி மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வெற்றி விழா இன்று 16-05-2013 நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்;ஸ ஆர். பலல்ல, வடமேல் மாகாண சபை முதல் அமைச்சர் அதுல விஜேசிங்க, வடமேல் மாகாண சபை அமைச்சர்களான குணதாச தெஹிகம, அசோக வடிவமங்காவ, மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே. பாதுகாப்பு முப்படைப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், சமயப் பெரியார்கள், உயிரிழந்த படை வீரர்களின் குடும்பஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் படையினருக்கு மரியாதை அணிவகுப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
Post a Comment