அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், தேசிய ஷூரா சபையும்
(நாகூர் ழரீஃப்)
முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சவால்களைமுறியடிக்கும் ஒருஅமைப்பாகதேசிய ஷூரா சபை உதயமாவதாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். சென்ற 02-05-2013 ஆந் தேதி இச்சபையின் இடைக்கால சபையை தெரிவு செய்வதற்காக வெள்ளவத்தை மியாமி வரவேற்புமண்டபத்தில் ஒருசந்திப்பும் இடம் பெற்றது.
இச்சந்திப்பில் பலஉலமாக்கள்,அறிஞர்கள்,புத்திஜீவிகள், இயக்க அங்கத்துவர்கள் பலரும் கலந்து கொண்டமையானது உளமாறவரவேற்க வேண்டியஓர் அம்சமாகும்.
இச்சபையின் அடிப்படைநோக்காக, முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரதானசவால்களைஎதிர் கொள்வதோடு,தேசத்தைக் கட்டியெழுப்புவதில் காத்திரமானதொருபங்களிப்பைவகிப்பதும்,சமாதானசகவாழ்வு,தேசியநல்லிணக்கம், முஸ்லிம் சமூகத்தின் இருப்புஆகியனவாகும்.
உண்மையில் மேற்படி இலக்கையும் நோக்கையும் கொண்டஓர் தாய் சபையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்படும் போது,ஏன் இத்தகைதொரு சபையின் தேவைஉணரப்பட்டது?
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்தவரையில் பேருவலை மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிவாசலில் இடம் பெற்றகசப்பானநிகழ்வுடன்,பலஅமைப்பினரையும்,கல்விமானகளையும்,தரீக்காக்களில் அங்கத்துவம் வகிப்பவர்களையும் உள்வாங்கிய இப்படியானஒருசபையைஅதுஉருவாக்கியது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இயக்கங்களைஉள்ளடக்கிய முஸ்லிம் கவுன்ஸில் ஒஃப் ஸ்ரீலங்காஎனும் அமைப்பும் செயற்பாட்டில் உள்ளது. இத்திஹாது அஹ்லித் தௌஹீத் எனும் அமைப்பும் எல்லாத் தொஹீத் அமைப்புக்களையும் உள்ளடக்கியதாகச் செயற்படுகிறது.
அப்படியாயின் அவைபோன்ற இலக்கையும் நோக்கையும் கொண்டமற்றுமொருஅமைப்புஏன் என்றுபலரும் சிந்திக்கின்றனர்.
இச்சபைஉருவாகுவதன் மூலம் சமூகத்தைஏதோஒருஅமைப்பில் தனதுசக்திற்கும் வரையரைகளுக்கும் மத்தியில் வழிநடாத்தில் செல்லும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைகீழ்தள்ளுவதா? அல்லதுசமூகம் பிளவுபட்டுள்ளதுபோதாமைக்கு இன்னும் ஒருபிளவா? என்றுஎண்ணத் தோன்றுகிறது.
நம்பிக்கை,நாணயமானதொருகுழுவினர் சமூகத்தின் தலைமைப் பொறுப்பினைக் கையில் எடுக்கவேண்டியதேவைசமூகத்தில் பெரிதும் உணரப்பட்டதுஎன்றமற்றும் சிலரதுகருத்து,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் நாட்டுமக்கள் வைத்துள்ளநம்பிக்கையைதகர்ப்பதாகஉள்ளது.
மேற்படிபல்வேறுதரப்புக்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் அதன் வழிகாட்லுடனும் அதற்குத் தகுந்தஒத்தாசைகளைவழங்கி,கைகோர்த்துச் செயற்பட்டால் இன்னும் உத்வேகமாகஅமையலாமல்லவா? சுனாமிப் பேரலை, மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம்,தேசிய இறுதிநபித்துவத்தைப் பாதுகாப்பதற்கானமாநாடுபோன்றசந்தர்ப்பங்களில் இத்தரப்புக்களின் முழுமையானஆதரவுகிட்டியதால் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் வெற்றிபெற்றதுஎன்பதைநாம் இன்னும் மறக்கவில்லை.
இச்சபைக்காகப் பாடுபடும் அல்லதுஉழைக்கும் உள்ளங்களில் சிலவற்றின் சமூகநோக்கையும் இக்லாஸையும் பின்வரும் வரிகள் எமக்குஉணர்த்துகின்றன. இது அண்மையில் ஒரு இணையச் செய்தியில் வாசிக்கக் கிட்டியவை :
'துரதிஷ்ட வசமாககொழும்பில் செயற்படும் அமைப்பொன்று இந்த ஷூரா சபையானது,தமதஆழுகைக்குக் கீழும் முழுமையானகட்டுப்பாட்டுக்குக் கீழும் தாம் நியமிக்கும் ஒருநிறைவேற்றுஅதிகாரியின் நிருவாகத்தின் கீழும் வரவேண்டும் எனவிடாப்பிடியாக இருக்கிறார்கள். அவர்கள் அவசரஅவசமாகதமக்குத் தெரிந்தவர்களையும் வேண்டியவர்களையும் தெரிவுசெய்து,தாம் ஒரு முஸ்லிம் ஆலோசனைசபையைஅமைத்துவிட்டதாகபரப்புரைகளைச் செய்துவருகின்றனர்';.
அப்படியாயின் முதற் கோணல் முற்றிலும் கோணல் என்றஅடிப்படையிலாஆரம்பிக்கப்படுகிறது இச்சபை? அல்லது இதனையும் தமதுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்றுஆசைப்படுகிறார்களா?
மற்றுமொருசந்தேகமும் எழுகின்றது. அதாவது,தேசிய ஷூரா சபையானது,ஏற்கனவே இருக்கின்றநிறுவனங்களைவிட கூடியமுக்கியத்துவத்தைபெறமாட்டாதுஎன்பதாகும். கூடியமுக்கியத்தும் பெறவேண்டியதுடன்,அதேவேளை,இருக்கின்றநிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அல்லதுவழிநடத்தும் ஒருசபையின் தேவைதான் இன்றுஉணரப்பட்டிருக்கின்றதுஎன்றஉண்மையைஏன் இதன் போதுசிந்திக்கவில்லை.
இன்றுவரைசிலஅமைப்பினர் அவர்களைஎவரும் கட்டுப்படுத்தவோ,கட்டுப்பாட்டுக்குவரவோதயாரில்லாதநிலையில் செயற்படுகின்றனர். இவர்களால் பலசமூகப் பிரச்சினைகள் எழுகின்றன. இப்படியானஅமைப்புக்கள் பற்றிக் கூடுதல் கவணம் செலுத்தப்படவேண்டும்.
அரசியல் கலப்படம் இல்லாத இத் தேசிய ஷூரா சபையானதுஎப்படிஅரசியல் சாயம் பூசிக் கொண்டவர்களைஉள்வாங்கியது. அன்றையதினம் பேச்சாளர்களாககலந்துகொண்டபலர் அரசியல் சாயமுடையவர்கள். இச்சபைபற்றிமிகஅதிகமாகபத்திரிகைகளுக்கும் இணையங்களுக்கும் எழுதுபவர்களும் அச்சாயமுடையவர்களேஎன்பதும் சிந்திக்கவேண்டியஒருவிடயமாகும்.
எல்லவற்றிற்கும் மேலாக,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாஎன்பதுதற்போதையகௌரவத் தலைவர் அல்லதுநிறைவேற்றுக் குழுவுக்குச் சொந்தமானதன்று. அதுநாட்டு முஸ்லிம்களின் பொதுச் சொத்தாகும். ஆலிம்களைக் கொண்டதாகஅதுஅமையப்பெற்றிருப்பினும் தேவைக்கேற்பபுத்திஜீவிகள்,நீதித் துறையினர் போன்றபலரதும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் உள்வாங்கியேஅதுசெயற்படுகிறது.
எனவே, இப்புதியசபையின் தோற்றத்தினால் அதன் செல்வாக்கோ,அதன் மீதுள்ள நம்பிக்கையோ செல்லாக்காசாகாமலும், சமூகத்தில் இன்னுமொரு புதியபிளவை உருவாக்கவழியமைக்காமலுமே எமது சமூகநகர்வுகள் இடம்பெறவேண்டும்.
'அல்லாஹ்வேயாவற்றிற்கும் போதுமானவன்'
இப்புதியசபையின் தோற்றத்தினால் பெரப்படும் இலாபம் என்னவெனில் பதவி ஆசையோடு இருப்பவர்களுக்கு ஒரு பதவி கிடைக்கப்போகிறது. அவ்வளவுதான்………………..
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
மேற்படி கட்டுரை உலமாக்களுக்கும் ஷூரா சபைக்கும் ஆரபத்திலேயே முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய கட்டுரையாக காணப்படுகின்றது .
சகோதரர் நாகூர் ழரீஃப் (உஸ்தாத் )அவர்களே! இந்த உங்கள் கட்டுரை மூலம் உங்களுக்கு இது பற்றி முழுமையான தெளிவு கிடைக்கவில்லை என்பதே உண்மை. எதுவும் முழுமையாக தெளிவுபெறாமல் கருத்தத் தெரிவிப்பதானது மக்களை பிழையாக வழிநடாத்தவதாக அமையும். எனவே கீழ்வரும் விடயங்களில் மிக அவசரமாக நீங்கள் தெளிவு பெற வேண்டும்.
ReplyDelete1. அவசர அவசரமாக ஒரு ஆலோசனை சபையை அமைத்துக் கொண்டு எமக்குக் கீழ்தான் எல்லோரும் இயங்க வேண்டும். என்ற சொன்னது யார். (அது எமது அந்த இடைக் காலக் குழுவல்ல. இப்படியும் ஒரு பிரிவினர் செய்துள்ளர்.) ஆனால் எமது குழு இன்னும் ஒரு ஷுறாவை அமைக்கவில்லை. இன்னும் இன்னும் பல கலந்துரையாடல்களையே இது செய்து வருகிறது.
2. நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி இது ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எதிரான செயற்பாடு என்று விளக்கமில்லாமல் சொல்வீர்கள்.
3.எமது மியாமி கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள் யார் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? (அதன் கௌரவ பொதுச் செயலாளர், மாவட்டத் தவைர், மட்டுமின்றி பல நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்)
4. அப்படியானால் ஜம்இய்யத்துல் உலமாவே அதற்கு எதிராக செயற்படுகிறது என பகுடி செய்கிறீர்களா?
எனவே உஸ்தாத் அவர்களே! தெளிவில்லாமல் கருத்துச் சொல்லி சமூகத்தைக் குழப்ப நினைக்க வேண்டாம். என அன்பாய் வேண்டுகிறேன்.
As Sahik haidar ali Avarkale!
ReplyDeleteIdu Patriya Palarathu Aakkankalaum Enathu Katthurayayum Innum Pala Tadavaikal Padiunkal Unmai Purium.
Unkalukku Matthum Than Karutthu Sudanthiram? Enkalukku Anatha Sudanthiram Illaya? Nankal Veli Natthil Irunthalum Ellavatrayum Vilankitthan Eludiyulom.
இன்ஷா அல்லாஹ், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சன்மார்க்கத் தலைமத்துவதின் தேசிய ரீதியிலான ஒத்துழைப்புடனேயே உத்தேச தேசிய ஷூரா அமைவிற்கான பணிகள் முன்னெடுக்கப் படும் என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
ReplyDeleteஆலோசனை சபைகள் குறித்து அடுத்த சிறுபான்மைசமூகங்களும் சிந்திக்கின்றன, ஏற்கனவே இலங்கைவாழ் கிறிஸ்தவ சமூகங்கள் தமக்குரிய ஒரு தேசிய சபையை அமைத்து வெற்றிகரமாக வெற்றிகரமாக தாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
தமிழர்களும் ஒரு தேசிய ஆலோசனை சபையை அமைத்துக் கொள்வது குறித்துசிந்திக்கின்றார்கள் 12/05/2013 வீரகேசரி பத்திரிக்கை அதுகுறித்த பிரதான தலைப்புச் செய்தியை பிரசுரித்துள்ளது.
இலங்கைமுஸ்லிம்களும் தரப்புக்களையும் சகல உள்வாங்கிய தேசிய ஷூரா சபையொன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் நகர்வுகளை மேற்கொள்ளுகின்றனர். துரதிஷ்ட வசமாக கொழும்பில் செயற்படும் அமைப்பொன்று இந்த ஷூராசபையானது தமது ஆளுகைக்கு கீழும் முழுமையான கட்டுப்பாட்டிற்கு கீழும் தம் நியமிக்கும் ஒரு நிறைவேற்றுஅதிகாரியின் நிருவாகத்தின் கீழும் வர வேண்டும் என விடாப்பிடியாகஇருக்கின்றார்கள். அவர்கள் அவசர அவசரமாக தமக்குத் தெரிந்தவர்களையும் வேண்டியவர்களையும் தெரிவு செய்து தாம் ஒரு முஸ்லிம் ஆலோசனை சபையை அமைத்து விட்டதாக பரப்புரைகளையும் செய்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் இரண்டாம் திகதிகொழும்பில் கூடிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ் லாமிய இயக்கங்கள் தரீக்காக்கள் என்பவற்றின்பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகத்தினர், உலமாக்கள் அறிஞர்கள் வர்த்தக சமூகத்தினர் உத்தேச தேசிய ஷூரா சபை அமைவத்ற்காகன இடைக்கால குழுவினரின் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்துள்ளனர். அங்கு சமூகத்தின் பல்வேறு தரப்புக்களினாலும் முன்வைக்கப் பட்ட ஆலோசனைகள் தற்போது நிபுணர் குழுக்களின் பரிசீலனைகளுக்காக முன்வைக்கப் பட்டுள்ளன,நாடு தழுவியமட்டத்தில் ஆலோசனை சந்திப்புக்கள்இடம்பெற்று வருகின்றன.
இந்த பணியில்பல்வேறு குழுக்களாக ஈடு பட்ட பல்வேறுதரப்பினர்களும் இறுதியில் ஒரே அணியாகஒன்று சேர்ந்து தேசிய முஸ்லிம் ஷூராகவுன்சிலுக்கானஇறுதி வரைவை வெளிக் கொணரும்இடைக்காலகுழுவினராக செயற்படுகின்றனர்.
இந்த இடைக்கால குழுவின் எந்தஒரு உறுப்பினரும் தாம் தேசிய ஷூராவில் இடம் பெற வேண்டும் அல்லது ஏதாவது ஒரு இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த விதமான சுயநல எண்ணமும் இல்லாது சமூக மற்றும்தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணிக்காக தம்மை ஈடு படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
தேசிய ஷூரா சபை என்பதுபுதிய ஒரு உலமா சபையோ,இஸ்லாமிய இயக்கமோ,தாவா அமைப்போ, அரசியல் கட்சியோ அல்லது தொண்டர் நிறுவனமோ அல்ல,மாறாக சகல அமைப்புக்களையும் அவர்களது பணிகளையும் மதிக்கின்றபொதுவான சமூகவிவகாரங்களில் அவர்களையும் சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் ,வர்த்தகசமூகத்தினர், இளைஞர் மாதர்அமைப்புக்கள் சிவில் மற்றும் அரசியல்தலைமைகள் என சகல தரப்பினரையும் ஒருங்கிணைக்கின்றஒருஒருங்கிணைப்பு பொறி முறையாகும்.
தேசிய ஷூரா சபை எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டுநிறுவனத்தின் ஜமாத்தின் அமைப்பின் கீழ் வருகின்றஅல்லது மேல் வருகின்ற ஆலோசனை சபையோ அல்ல,அதுஎந்த தேசியஅல்லது பிராந்திய அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கும் கடப்பாடுஉடையதுமல்ல. அது சுயாதீனமான,அதிகார பூர்வமான ,முஸ்லிம்சமூகத்திற்கு பொறுப்புக் கூறக் கூடிய, தெளிவான நிகழ்ச்சி நிரல்களுடன் தொழிற்படும் ஒரு தேசிய முஸ்லிம் ஒருங்கிணைப்பு பொறி முறையாகும்.
இன்ஷா அல்லாஹ், குறுகிய உள்நாட்டுவெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களுடன், எந்த அமைப்பினரும் தனி நபர்களும் பிரபலங்களும் இந்த அமானிதமானவரலாற்றுப் பணியை சீர் குலைத்து விடவேண்டாம் என்றும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் சகல தரப்புக்களையும் அல்லாஹ்வுக்காக பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்
இனாமுல்லாஹ்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் . சகோதரர் இனாமுல்லாஹ் அவர்களே !
ReplyDeleteஉங்கள் முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக
உத்தேச சூரா சபை நாடுதழுவிய வலைபின்னலை எவ்வாறு நிருவப்போகின்றது ,கொழும்பு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு உள்வாங்கப்படும் , தற்போதைய ஜம்மியதுல் உலமா ,முலும் கவுன்சில் ஆகியவற்றின் பங்களிப்புகள் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எவ்வாறு அமையப் போகிறது . இந்த சூரா சபையில் உள்வாங்கப்படாத துறை சார்ந்த வர்களின் சமூகதிட்கான பங்களிப்பை எவ்வாறு பெறப் போகிறது என்பது பற்றிய விளக்கங்களை உத்தேச அளவிலாவது சற்று தெளிவு படுத்த முடியுமா?
உத்தேச தேசிய ஷூரா சபை குறித்து பல்வேறு கேள்விகள் முனவைக்கப் படுகின்றன அவற்றை மையமாக வைத்து ஒருசில கருத்துக்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
சுருக்கமாக கூறின் இது ஒரு 1001 ஆவது அமைப்பு அல்ல, தற்போது இருக்கின்ற அமைப்புக்களை முஸ்லிம் தேசிய விவகாரங்களை கையாள்வதற்காக உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறிமுறையாகும்.
சமூகத்தில் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களையும் தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் உள்வாங்குகின்ற ஒரு பொறிமுறையுமாகும்.
உத்தேச தேசிய தற்பொழுது சமூகத்தில் இருக்கும் எந்தவொரு சன்மார்க்க,சிவில் அரசியல் தலைமைகளையோ ,இஸ்லாமிய தாவா அமைப்புக்களையோ தொண்டர் நிறுவனங்களையோ பிரதியீடு செய்யும் புதியதொரு அமைப்புமல்ல.
எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கீழோ அல்லது மேலோ அல்லது அரசியல், இயக்க நிகழ்ச்சி நிரல்களின் ஆதிக்கத்தின் கீழோ தேசிய ஷூரா அமைய மாட்டாது.
நேரடியாக அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதில் இடம் பெற மாட்டார்கள், ஆனால் குழுநிலை பிரதிநிதித் துவத்தை அவர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் ஆராயப் பட்டு வருகின்றன.
பொதுவாக தற்பொழுது சமூகத்தில் இருக்கும் அமைப்புக்களினால் தனித்து முகம் கொடுக்க முடியாத அல்லது சுமக்க முடியாத விவகாரங்களை சகல தரப்புக்களும் இணைந்து பொறுப்பேற்கின்ற ஒருங்கிணைப்புப் பொறிமுறையாகும்.
தேசிய அளவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சன்மார்க்க வழி காட்டலுடனும் ஒத்துழைப்புடனுமேயே உத்தேச தேசிய ஷூரா அமையும். அதேபோன்று முஸ்லிம் கவுன்ஸில் உற்பட தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள சகல் அமைப்புக்களையும் தேசிய ஷூரா ஒருங்கிணைக்கும்.
தேசிய ஷூரா மஹல்லா மட்டத்திலிருந்து ஆரம்பித்து , சனத்தொஅகி செரிவிற்கேற்ப பிரதேச செயலாளர் பிரிவு அல்லது மாவட்ட மட்டம் முதல் தேசிய மட்டம் வரை ஒருங்கிணைப்புப் பொறிமுறையினை கொண்டிருக்கும்.
தனிப்பட்ட முறையில் தேசிய ஷூரா எனும் ஒருங்கிணைப்பு பொறிமுறை பற்றி அதிகம் பேசும் எழுதும் நான் (இனாமுல்லாஹ்) இடைக்கால அமைப்புக்குழுவில் ஒரு உறுப்பினர் மாத்திரமே.
இந்த இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் (நான் உற்பட) உத்தேச தேசிய ஷூரா சபை அமையப் பெறின் தமது பணியை நிறைவு செய்துகொள்வர், பணியின் தூய்மை கருதி தேசிய ஷூராவில் நாம் இடம் பெறுவதில்லை என தீர்மானித்துள்ளோம். எமக்கென ஒரு நிகழ்ச்சி நிரல் கிடையாது.
தேசிய ஷூராவின் கட்டமைப்பு, யாப்பு, நிர்வாகம், செயலகம், நிதிநிர்வாகம், உறுப்பினர் தகைமைகள் போன்ற இன்னோரன்ன விவகாரங்கள் தற்பொழுது நிபுனர்த்துவ ஆலோசனைகளுக்கு உற்படுத்தப் பட்டு விரிவாக பல்வேறு தரப்புக்களுடனும் ஆராயப்படுகின்றன. இறுதி வரைவு விரைவில் அமைய விருக்கும் இடைக்கால தேசிய ஷூரா சபையிடம் கையளிக்கப் படும். இன்ஷா அல்லாஹ்.
இறுதியாக தனிப்பட்ட முறையில் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஒருசிலரை (என்னையும்) அல்லது இதற்கு ஆதரவு வழங்கும் பிரபலங்களை அல்லது தரப்புக்களை காரணமாக வைத்து உத்தேச தேசிய ஷூரா எனும் மகோன்னதமான வரலாற்றுப் பணியை விமர்சிக்க வேண்டாம் என சிலரையும் வேண்டிக் கொள்கின்றேன்.
உண்மையில் கேள்வி கேற்கும் பலரும் நல்ல எண்ணத்துடன் தான் கேட்கின்றார்கள், இந்த அமானிதமான முஸ்லிம் தேசிய பணியில் தங்களும் பங்காளர்களாக மாறி ஒரே தரப்பாக இருந்து கேள்விகளுக்கான விடைகளை ஒன்றிணைந்து தேடுவோம், அதுவே ஷூராவின் இறுதி இலக்குமாகும் என வேண்டிக் கொள்கின்றேன்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் நல்ல உயரிய பணிகளுக்கு முட்டுக் கட்டைகளாக விழுந்து விடக் கூடாது . ஸூரத் ஹூத் 88, 89 ஆவாது வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.
தற்போதுள்ள முஸ்லிம் கவுன்ஸில் அதுவே எல்லா அமைப்புகளையும் உள்வாங்கின நிருவனம் எனவே அதனுடன் இன்னும் தேவையான முக்கிய பிரமுகர்களை இணைத்துக்கொண்டு அதனையே ஒரு சூரா சபையாக மாற்றியமைத்தால் கூடிய சீக்கரம் சூரா சபையும் உருவாகும். மக்களுக்கு சேவையும் நடக்கும். (அதனை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.)
ReplyDeleteஇல்லையேல் நாளாந்தம் கலந்துரையாடல்கலை வைத்துக்கொண்டும் புரியாணி சாப்பிட்டுக்கொண்டும் இருக்கவேண்டியதுதான்.
தேசிய சூராசபையின் நடைமுறை சாத்தியம் பற்றிய சந தேகங்களுக்கு சகோ இனாமுல்லா கான் அவர்களின்விள க்கம்போதுமானது என நிணைக்கிறேன்.தேசிய சூராசபை என்ற சிந்தணை பல்லாண்டுகளுக்கு முன்பே மக்கள் முன் சமர்ப்பிக் கப் பட்டு,விவாதிக்கப் பட்டு புத்திஜீவிகளின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.அண்மைகாலமாக முஸ்லிம் களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட பேரினவாத நடவடிக்
ReplyDeleteகைகள் உத்தேச சபையை துரிதமாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற உணர்வை சம்பத்தப் பட்டவர்களுக்கு
உருவாக்கியிருக்க வேண்டும்.இந்த சாதகமான சூழலை நல்லெண்ணம் கொண்டவர்கள் உற்சாகப் படுத்தலாம்.
இலங்கை முஸ்லீங்களுக்கான தேசிய சூரா சபை ஒன்றின் அவசியம் என்பதை இஸ்லாமிய இயக்கங்கள் தம் இஜ்மாவான முடிவாக உறுதிப்படுத்திக்கொண்டால் Ijma as a Common Roadmap and Collective Awareness. என்ற விழிப்புணர்வை அடைந்ததாக புரிந்துகொள்ளலாம்
ReplyDelete