Header Ads



பேச்சு சுதந்திரமும், இலங்கை முஸ்லிம்களும்..!


(அபூ அஹ்மத்  UK யில் இருந்து)

ஜப்னா முஸ்லிம் இணையத் தளத்தினூடாக எமது இலங்கை மண் இஸ்லாமியர்களின்  சிந்தனைக்கு..!                                                                                

சென்ற வெள்ளியன்று அதிகாலை அசாத் சாலி விடுவிக்கப் பட்ட பின்னர் சில ஊடகங்கள் வழியாக கருத்துத் தெரிவித்திருந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையொன்றை வாசித்த போது உண்மையிலேயே அப்படியே ஆடிப் போனேன்.  பிரசுரமாகி இருந்த அச்செய்தியை கண்ணுற்ற போது இலங்கையில் இன்னும் எத்தனை தமிழ், சிங்கள ஆங்கில ஊடகங்கள் அச்செய்தியை பிரசுரித்திருக்குமோ, அதனைக் கண்ணுற்ற லட்சக்  கணக்கான  மக்கள் நாட்டு முஸ்லிம்களை எவ்வாறு இடை போட்டிருப்பார்களோ, இனவாத சக்திகளுக்கு அக்கருத்து மென் மேலும் எந்தளவு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்றெல்லாம்   எண்ணி வெளிநாட்டில் இருந்து கொண்டு நொந்து போனவர்களில் நானும் ஒருவன்.    கோத்தாபயவும், உளவுப் பிரிவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக வெளியாகியிருந்த செய்திகளின் முக்கிய பகுதி இது தான்.                                                                                

( "நாட்டில் அடிப்படை வாதத்தை தூண்டுகின்ற மேலும் சிலர் தொடர்பிலும் அரசாங்கத்தில் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அஸாத் சாலி தமிழ் நாட்டுக்குச் சென்று ஆயுதம் எடுப்பது பற்றிப் பேசியதனாலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.இதே நேரம், அடிப்படைவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் மேலும் 12 முஸ்லிம் குறித்து உளவுப் பிரிவினரது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன")

இதில்  "அடிப்படைவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் மேலும் 12 முஸ்லிம் குறித்து உளவுப் பிரிவினரது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன" என்ற விடயம் தான் மிகப் பாரதூரமானதாகும்.இதனை சற்று அவதானமாக நோக்கும் அனைவருக்கும்  இது எவ்வளவு சிந்திக்கத் தக்கதும் இதற்குப் பின்னால் எத்தனை அர்த்தங்களும்,அச்சுறுத்தல்களும்,முஸ்லிம் சமூகத்தின் வாய்க்கு பூட்டுப் போட்டு அடக்குவதற்கான அதட்டல் கட்டளைகளும் இதற்குள்ளே புதைந்துள்ளன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.   

இதில் முந்திய இரண்டு செய்திகளும் கோத்தாவினாலேயே  வெளிப்படுத்தப் பட்டிருப்பது தெளிவான நிலையில் மிகப் பாரதூரமான இறுதிச் செய்தி உளவுப் பிரிவால் வெளிப் படுத்தப் பட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது.  உளவுப் பிரிவு எனும் போது யாரின் பக்கம் விரல் நீட்டலாம் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்றே கருதலாம். நாட்டில் அமைதியை கடை பிடித்து வந்த சிங்கள, முஸ்லிம்களிற்கிடையே இனக் கலவரத்தை தூண்டுவதிநூடாக நாட்டைக் குழப்பியடித்து உல் நாட்டிலும், வெளியுலகிலும் நாட்டுக்கு அவப் பெயரை உண்டு பண்ணுவதில் பகிரங்கமாகவே ஈடு பட்டவர்கள் யார் என்று உலகமே அறிந்து கொண்டுள்ளதோடு உலகின் பல அரசுகளும், தனியார் அமைப்புகளும் கலகக் கார துறவிகளுக்கு தமது  கண்டனங்களை  தெரிவித்து வரும் இந் நிலையில் மிகப் பொறுப்பு வாய்ந்த  பாதுகாப்புத் துறை மாத்திரம் சூத்திரதாரிகளை அடையாளம் காணுவதில் ஏன் உல்ட்டாவாக சிந்திக்கின்றது என்பது தான் எமக்கு பெரும் சந்தேகத்தை  உண்டு பண்ணுகிறது.          

சுப்ஹானள்ளாஹ், பொது பல சேனா, ஜாத்திக  ஹெல உறுமய,சிங்கள ராவய உள்ளிட்ட கடும் இனவாதப் போக்காளர்கள் பகிரங்கமாக நாட்டில் ஏற்படுத்திய குழப்பங்கள் கொஞ்ச நெஞ்சமா. உளவுத் துறை முஸ்லிம்களின் நடவடிக்கைகளை மட்டும் தான் சல்லடை போட்டு, பூதக் கண்ணாடி அணிந்து மோப்பம் பிடிக்குமா ?? பௌத்த இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களை சீண்ட ஆரம்பிக்க முன்பு முஸ்லிம்கள் ஏதேனும் குரல் எழுப்பினார்களா ? மிகவும் அமைதியாக இருந்த முஸ்லிம்களை உசுப்பேத்தியவர்கள் யார் ?  இன மோதலை உண்டு பண்ணுவதற்காக அல்லாஹ்வின் பெயரை பன்றியின் உருவத்தோடு வரைந்து அதை பொம்மை வடிவில் கொண்டு வந்து குளியாப்பிட்டிய நகரில் பகிரங்கமாக எரித்தவர்கள் யார் ??  கண்டியில் கூட்டம் போட்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பெஷன் பக் களஞ்சியத்தை உடைப்பதற்கு தூண்டியவர்கள் யார் ?? முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு உணவு வகைகளை வழங்கும் போது அவ்வுணவில் மூன்று முறை துப்பி விட்டுத் தான் வழங்க வேண்டும் என்று  புனித குர் - ஆனில் கூறப்பட்டுள்ளதாக சுமார் 5000 பொது மக்கள் மற்றும் 300 இற்கும் மேற்பட்ட காவல் துறையினர் முன்னிலையிலேயே கண்டியில் சுத்தப் பொய் சொல்லி குர்- ஆணுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் யார் ?? 10 இற்கும் மேற்பட்ட பள்ளிவாயல்களை  ஜாமத்துக் காடையர்களை தூண்டி விட்டு சேதப் படுத்தியதோடு அவற்றில் சிலவற்றை பட்டப் பகலில் காவல்துறையினர் புடை சூழ அடித்து நொறுக்கியவர்கள் யார் ??  

நாட்டில் காக்கிச் சட்டை அணியாத காவல் துறையினர் நாமே என்று வெளிப்படையாகவே ஊடகங்கள் முன்பு கொக்கரித்து விட்டு அக்கூற்றை உண்மைப் படுத்தும் விதத்தில் தலை நகரிலும் அதற்கு வெளியிலும்  பல காவி உடை ஒப்பறேஷங்களில் ஈடு பட்டு நாட்டின் காவல் துறைக்கே மல்பா காட்டி அதிர வைத்தவர்கள் யார் ? ஹலாலை பூதாகரமாக்கி எவ்வித அடிப்படையும் இன்றி  ஜம்- இய்யதுல் உலமாவை தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க முயன்றவர்கள் யார் ? தென் கிழக்குப் பல்கலை கலகத்தை ஜிகாதியத் தொட்டில் என்றதோடு,  முஸ்லிம்களுக்குள் தஹ்வா செய்து கொண்டிருக்கும் சீர்திருத்த அமைப்புகள் அனைத்தையும் அநியாயமாக  பயங்கரவாதத்தோடு இணைத்துப் பேசி நாட்டு முஸ்லிம்களை ஓரம் கட்ட நினைத்தவர்கள் யார் ? தம்மை மட்டும் அறிவாளிகள் என கற்பனை செய்து கொண்டு சிங்கள சமூகத்தையே மடையர்கள் என திட்டித் தீர்த்தவர்கள் யார்?    

இவ்வினாக்களை தொடர்ந்தால் பட்டியல் முடிவின்றி நீழும்.                                                                                               மிகவும் ஆச்சரியத் தக்க விடயம் யாதெனில் மேற்சொன்ன சகல அடாவடித் தனங்களும் அரங்கேற்றப் பட்டதற்கான ஆதாரங்களாக ஏராளமான புகைப் படங்களும் வீடியோ கானொளிகளும் இன்று வரை சமூக இணையத் தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கின்றன. 

குற்றவாளிகள் மிகத்தெளிவாகவே அடையாளம் காணப் பட்டிருக்க ஏன் உளவுத் துறை  பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் முஸ்லிம்களை மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் எம்முன்னே உள்ள பெரும் வினாவாக உள்ளது. தமிழ் சமூகமும் நாட்டில் 30 வருடங்கள் ஆயுதமேந்தி போராடியுள்ளது. ஜே வி  பி யின் ஆயுதப் போராட்டத்தின் மூலம் சிங்கள சமூகமும் அதே தவற்றை செய்துள்ளது.  ஒரு போதும்  நாட்டில் ஆயுதம் ஏந்தி  நாட்டுக்கோ, நாட்டில் இருக்கும் (இருந்த )  அரசாங்கங்களுக்கோ  துரோகம் செய்யாது அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பது முஸ்லிம் சமூகம் மட்டுமே. நிலைமை இவ்வாறிருக்க பாதுகாப்பு அமைச்சரும், உளவுத் துறையும்  கூறியிருக்கின்ற இக்கருத்துகளானது  நாட்டின்  முழு முஸ்லிம் சமூகத்துக்கும் பேரிடியை ஏற்படுத்தக் கூடியவையாகும்.  ஞாயமாக சிந்திக்கின்ற பௌத்த, தமிழ் உள்ளங்களும் கூட  இக்கருத்துகளை நிராகரிக்கவே செய்யும். ஆகவே   இப் பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டது எந்த வகையிலாவது பொருந்தக் கூடியது தானா   என்று கண்டிப்பாக  பாதுகாப்பு அமைச்சு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

5 comments:

  1. Ithatku emathu muslim sahoothar hal silarum kaaranamaahum. Enenraal kadanthakaalam galil thauheed jamathutku ethirppu kaattiyoor thauhid jamaathukku eppadiyaavathu enthavahayilayaavathu thadey sheyya veenaana poyyaana aniyaayamaana avathuruhaley arashaangathidam policil cid yil paper halil ariviththana. Ivarhal theevira vaathihal adippadeyvaathihal velinaattu panam varuhirathu enrellaam pala tholley haley koduthaarhal athan vileyvu thaan ellorum anupavikkiroom. Muslimgaley kalathu arukka samayam paarkiravarhalukku ithu nalla message unmey pool eduththuk kolla poohiraarhal.

    ReplyDelete
  2. The Glorious Qur’an says:
    “And hold fast, all together, by the rope which Allah (stretches out for you), and be not divided among yourselves;”
    [Al Qur’an 3:103]

    ReplyDelete
  3. இதற்க்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டியவர் நீதி அமைச்சரே அவருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் முறுகல் நிலை என்று கசிந்தாலும்...விபரம்??? சம்பந்தன் ஐயா தமிழ் மக்கள் விடயத்தில் எடுக்கும் தெளிவான நிலைபாட்டை போன்று நீதி அமைச்சரும் தனது தீர்கமான பரந்த (தேர்தல் நோக்கற்ற ) பார்வையை செலுத்தி சீண்டலுக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.

    ReplyDelete
  4. Eppadiyaavathu muslimkalukku payankaravaathi enra muththirai kuththave ivarkalin neendakaala thittam. Appathaan muslimkalai vettaiyaada mudiyum.

    ReplyDelete
  5. Ask asath sally's brother. ..he is da one informs to BBS

    ReplyDelete

Powered by Blogger.