இலங்கை மியன்மாரை நோக்கிச் செல்கின்றதா..? அரபு நாட்டு ஊடகங்கள் கேள்வி
முஸ்லிம்களைப் பற்றி பௌத்தர்களை ஏமாற்றிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா எனும் அடிப்படைவாத, கோத்திரவாத அமைப்பு செயற்பாடுகளை முன்னடுத்துவருகிறது. தனது கட்சி வேலைகளை கட்சிதமாக செய்வதற்கு அவர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர்.
இந்தப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட போது முஸ்லிம் சமூகம் மிகப்பொறுமையாக நடந்து கொண்ட போதும் இந்தப் பிரச்சினை விடயத்தில் அரசாங்கமும் நீதியும் நடந்து கொண்ட முறையைக் கண்ணுற்று அவர்களின் பொறுமை குறைந்துள்ளதை தற்போது பார்க்க முடியுமாக உள்ளது.
முழு உலகிலும் ஆங்கில மொழிமூல ஊடகங்களினால் இலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்கள் பற்றி பேசப்பட்ட போதும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் அரபு மொழி ஊடகங்களில் முதலில் இத்தகவல்கள் காணப்படவில்லை. சென்ற மாதம் மாத்திரம் மத்திய கிழக்கு நாடுகளில் வெளியாகி ஆங்கில மொழிப்பத்திரிகைகளில் இலங்கை நிலைமையும் பொதுபல சேனாவின் அட்டூழியங்களைப் பற்றியும் எழுதப்பட்டிருந்ததை கண்டுகொள்ள முடியுமாக இருந்தது. ஆங்கில மொழிமூலமாக அந்த நிலைமைகள் எழுதப்பட்டிருந்ததினால் அரபு மக்களிடமும் அதன் பொறுப்பானவர்களிடமும் அந்த செய்தி சென்றடைந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
தற்போது இந்த நிலைமை வெகுவாக மாறியுள்ளது. அரபு மொழிமூலம் வெளியாகும் நாளாந்த, வாராந்த சஞ்சிகைகளில் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினருக்கு நடக்கும் அவலங்களைப் பற்றி மிக விரிவாக பல பக்கங்களாகவும் எழுதப்பட்டுள்ளதுடன் இந்த நிலைமை அரசாங்கத்திற்கு அல்லது முழு இலங்கைப் பிரஜைகளுக்கும் இழப்பை ஏற்படுத்தும்.
அவ்வாறு குவைத் நாட்டில் வெளியிடப்பட்ட செய்திகளில் மிக முக்கியமானது எனக்கருதக்கூடிய சில செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.
குவைத் நாட்டில் வெளிவரும் தினசரிப்பத்திரிகைகளில் அல்வதான் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஏப்ரல் மாதம் 4வதும் 8வதும் தினங்களில் இருகட்டங்களாக இலங்கை விவகாரம் பற்றி விரிவான கட்டுரையொன்று வெளியாகியது. 'இலங்கை மியன்மாரை நோக்கிச் செல்கின்றதா' என்று ஒரு கேள்வி இந்தக் கட்டுரையின் மூலம் வினவப்பட்டுள்ளது.
இஸ்லாமிய உலகில் முதல் தரமானதும் பலம் வாய்ந்ததுமான ஒரு வாராந்த சஞ்சிகைதான் அல் முஜ்தமா. அரபு மொழியை வாசிக்கத் தெரிந்த உலக முஸ்லிம்கள் கட்டாயமாகப் படிக்கும் ஒரு சஞ்சிகையுமாகும். பொதுபல சேனா முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக கொண்டு செல்லும் விரோதமான செயல்கள் அனைத்தும் பலகட்டங்களாகப்பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
பொதுபல சேனா இலங்கையை மியன்மாரை நோக்கி கொண்டு செல்கின்றது. 2-8 மார்ச் 2013 இதழ், பக்கம் 28-29
முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அடிப்படை வாதிகளின் எழுச்சி. 9-15 மார்ச் 2013 இதழ், பக்கம் 8
ஹலால் பிரச்சனையும் அடிப்படை வாதமும். 16-22 மார்ச் 2013 இதழ், பக்கம் 34-35
பௌத்த அடிப்படை வாதிகளின் மிரட்டல் காரணமாக அன்வர் மானதுங்க நாட்டை விட்டு வெளியானார். 13-19 ஏப்ரல் 2013 இதழ், பக்கம் 2
முஸ்லிம் சிறுபான்மையினர் அபாயகரமான நிலையில். 13-19 ஏப்ரல் 2013 இதழ், பக்கம் 28-29
இதற்கு மேலாக ஏனைய இணையத்தளங்களிலும், Face book மற்றும் Twitter மூலமாக அரபுமொழியினால் இலங்கை விவகாரம் பற்றிய தகவல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாளுக்கு நாள் தகவல்கள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. ஆங்கிலம் மற்றும் மொழிகளிலே இதில் பதிவுகள் இடப்படுகின்றன. அரபுலகிலே, குறிப்பாக குவைத்நாட்டிலுள்ள முக்கிய புதிஜீவிகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை இதில் இணைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தொடர்பாடல்கள் ஊடாக அந்த நாடுகளில் வழும் பொதுமக்களுக்கு மாத்திரமல்லாமல் மேலதிகாரம் படைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் இந்தத் தகவல்கள் ஏனைநழ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் போய் சேர்ந்திருக்கும் என்று யூகிக்கலாம்.
அகிம்சைவாதியான முழு பௌத்த மக்களுக்கிடையில் மிகவும் செற்பமான இந்த தீவிரவாத பௌத்த பிக்குவான ஞானசேர என்பவரும், அவர்களுடைய தோழர்களும் நாட்டைப்பற்றி சிந்திக்காது நடத்தும் இந்த செயற்பாடுகள் உலக மக்களிடத்தில் அவைகள் பிரபல்யம் அடைவது மாத்திரமல்லாமல் அரசாங்கம் நடுவாரக இருந்து நீதி செலுத்தாமல் இருப்பதன் மூலம் நமது பசுமையான இலங்கை நாட்டிற்கு ஏற்படக்கூடிய விபரீதங்கள் எவ்வளவானது என்று யாராலும் சொல்வதற்கு இயலாது.
மனித உரிமைகள் மீரல் என்ற பெயரில் அனைத்து நாடுகளும் எதிராக நிற்கும் இந்தக்கால கட்டத்தில் எமக்காக குரல் கொடுப்பதும் உதவி செய்வதும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாடுகளாகும். அத்தகைய நாடுகளில் அநேகமானவைகள் முஸ்லிம் நாடுகளாகும்.
ஜெனீவாவின் நாடகத்திற்கு இலங்கைக்கு சார்பாக வாக்களிப்பது மாத்திரமல்லாமல் தேவைப்படும் போது அனைத்து விதமான உதவிகளையும் செய்வதற்கு அந்த நாடுகள் எமது நாட்டுடன் தோழமை பூண்டுள்ளன.
தற்போது அரபு மொழியின் மூலம் அவர்களுக்கு படிக்கக் கிடைக்கும் செய்தியைக் கொண்டு இலங்கை நாட்டுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் உதவியும் கிடைக்காமல் போவதற்கு இடப்பாடு உண்டு.
கீழே குறிப்பிட்டுக்காட்டியுள்ள விடயங்களை விடவும் நாடு பெரும் கஷ்டமொன்றை சந்திக்க நேரிடலாம். இதைத்தவிர்க்க வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் தீவிரவாதத்தை மட்டுப்படுத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும்.
1. எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவு குன்றும் அல்லது சரிந்து விடும்
2. ஜெனீவா போன்று இன்னும் இன்னோரன்ன பிரச்சினைகளின் போது உதவி கிட்டாமை
3. நமது நாட்டுக்கு நிபந்தனையற்ற வகையில் கிடைக்கும் பில்லியன் கணக்கான உதவிகளில் குறைவு ஏற்படல் அல்லது அழிந்து போதல்
4. இலங்கை மென்மேலும் தனிமைப்படல்
5. ஹலால் சான்றிதழ் ரத்துச் செய்யப்பட்டதனால் ஏற்றுமதி குறைதல், அல்லது பணத்திற்கு அச்சமின்றி செலவு செய்யும்அரபிகளின் சுற்றுலாப்பயணங்கள் குறைவடையும் அல்லது நின்று விடும். இதன் மூலமாக இலங்கையின் பொருளாதாரம் விழ்ச்சியடையும்.
6. இலங்கையின் பொருளாதாரம் அரசியல் பரிபாலனம் என்பவை உலகலாவிய ரீதியில் தனிமைப்படுவதும், நகைப்பிற்குட்படுவதும் மாத்திரமல்லாது, உலகக் கடன் பழுவினால் நசுங்கி நாட்டில் வாழும் வறியவனுக்கு வாழ்வதற்கு வழியின்றிப் போகும்
Alhamdulillah this is the way almighty allah will help his religion and its followers our shopisticated weapon is only dua we will keep patients and suplicate to Allah his nusrath will come, now the time has come to Rajapakse regim to thing about all community as equal.
ReplyDeleteGreat opportunity
ReplyDeletetrue
ReplyDeleteஅரபு பத்திரிகைகள் இலங்கை விடயத்தை கூறவில்லை என்பது தவறு மாறாக சவ்தி அரேபியாவின் பிரபல இலத்திரணியல் பத்திரிகையான - மன்னரால் கூட வாசிக்கப்படும் ஓரே பத்திரிகை என்று அவரின் பேரன் கூறுகின்றார்- சபக் இலங்கை விடயமாக 29-01-2013 வெளியிட்ட செய்தி இதோ
ReplyDeletehttp://sabq.org/a7vfde
இச்செய்தி மொத்தமாக 105,094 முறை பார்வையிடப்பட்டு
112 அடிக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது
While we expect support from Muslim countries,we should always keep in mind that we learn to
ReplyDeletehandle our issues ourselves as rightful citizens of the country.We have come a long way without
giving priority to education and largely taking more interest on business opportunities.Muslims
must engage in all kind of national development process in all parts of the country mingling with
all communities because this is the land we all belong to.For centuries Muslim presence in the
country has been enormously instrumental gaining financial and commercial access to Muslim
countries world over.Majority of the population knows this and are really grateful but a small
group,a mixture of political,religious and racist are capable of inciting hatred and causing
fears in the minds of everyone,has been allowed to operate.The trend is on the increase on
different levels under different administrations whether Blue or Green.Muslims have to work
hard to ward off evils and embrace the innocents.