பீ.ஜைனுல் ஆபிதீனுக்கு புற்றுநோய் சத்திர சிகிச்சை
துஆ மட்டும் போதும்
அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.
என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.
என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர்.
அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை.
அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன.
எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம்.
அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம்.
எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன்.
ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன்.
ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது.
எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன்.
ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன்.
காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ்.
மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை
ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன்.
துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை.
எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன்.
ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான் நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது.
இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான்.
அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான்
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
எல்லாம் வல்ல அழ்ழாஹ் உங்களுக்கு பூரண சுகத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குவானாக!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி (ஸ்ரீலங்கா)-
இதை கேள்வி பட்டதும் நான் அழுதே விட்டேன் அல்லாஹுதஆலா நிச்சயம் உங்களுக்கு சுகம் தருவான் உங்கள் மார்க்கப்பனி தொடர வேண்டும் இலங்கையிலும் இந்தியாவிலும் பல லட்சம் பேர் தர்ஹா வழிபாட்டிலிருந்து விடுபட காரணமாயிருந்தது உங்கள் போதனைகள்தான் உங்களுடைய மார்க்கப்பனி நின்றுவிட்டால் எங்களுடைய வாழ்க்கை நீரில்லா பாலை வனம் போன்ராகிவிடும் யா அல்லாஹ் பீஜே அரர்களுக்கு பூரண சுகத்தை கொடுத்து மருமையில் உயர்ந்த பதவிகளை கொடுப்பாயாக.
ReplyDeleteயா அல்லாஹ் எங்கள் நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளை பரிக்கும் ராஜபக்ஸ குடும்பத்துக்கு இவ்வாரான நோய்களை கொடுப்பாயாக
If you are not there that wouldn't. happend, MY DEAR BROTHER DONT SAY LIKE THAT ALLAH IS DOING EVERY THING. Pj is only out put and given us pure knowladge what allah want us to accept. U c how many of us still dont know shirk. How many of us still in JAHILYA. so dont say thats PJ did
Deleteஎல்லாம் வல்ல ஏக இறைவன் அவருக்கு நிறைவான சுகத்தை அளிப்பானாக
ReplyDeleteشفاك الله- مبارك عبد المجيد
ReplyDeleteயாஅல்லாஹ், சகோதரர் ஜெய்னுலாப்தீன் அவர்களது குற்றம் குறைகளை மன்னித்து, இந்நோயிலிருந்து இவருக்கு புரண சுகத்தைக் கொடுப்பாயாக. ஆமீன்.
ReplyDeleteயாரயும் சங்கட படுத்தாமல் வாழ நினைக்கும் உங்களுக்கு.அல்லாஹ்
ReplyDeleteமறைமுகமாக உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாத்துக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக நிறைய சேவை செய்துள்ள, இந்துக்களுக்கு இஸ்லாத்தைத் தெளிவுபடுத்தி பலர் இஸ்லாத்தில் நுழைய காரணமாக உள்ள, பித்அத்திலும் ஷிர்க்கிலும் ஊரியவர்களுக்கு சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறுவதிலும் பாரிய பங்களித்த உங்களுக்கு தீராத சுகத்தையும், ஆரோக்கியத்தையும் வேண்டுகின்றேன். அல்லாஹ் உங்களுக்கு பரிபூரண சுகத்தை அளிப்பானாக. சத்தியத்துக்காக என்றும் குரல் கொடுப்பவராக உங்களைத் தொடரச் செய்வானாக.
ReplyDeleteஎன்றாலும், மனிதன் என்ற ரீதியில் உங்களுக்கு ஒரு உபதேசம். சொல்வது என் பொறுப்பு, கேட்பதும், விடுவதும் உங்கள் விருப்பம். இவ்வளவு காலமாக பிரச்சாரம் செய்து வந்த நீங்கள் அண்மையில் பாரிய சர்ச்சை ஒன்றை சமூகத்தில் ஏற்படுத்தியிருப்பதற்குக் காரணம் நீங்கள் கட் என் ரைட் ஆகக் கொடுத்த ஓர் அசமந்த பத்வா என்றால் மிகையாகாது. விடயத்துக்கு வருகிறேன்.
''அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் ஒருவருக்கு தீங்கை ஏற்படுத்தலாம்'' என யாரும் நம்பிக்கை கொண்டால் அவர் இணைவைத்தவராக (முஷ்ரிக்காக) மாறிவிடுவார் என்பதே உங்கள் கருத்து. அதை வெளியிட்ட மாத்திரத்தில் இந்தியாவில் TNTJ யும், இலங்கையில் SLTJ வறிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை முஷ்ரிக்காகக் கருதத் தலைப்பட்டனர்.
1. நீங்கள் கூறும் கருத்து சரியாக இருந்தால், தினமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதிவருமாறு நபியவர்கள் பணித்த ஸூரதுல் பலக் இல் ومن شر النفثت في العقد ''முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (வைகறையின் நாயனிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்)'' என எதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டப்பட்டுள்ளோம்?
இந்த வசனத்தை ஏற்க மறுப்பீர்களா? அல்லது அல்லாஹ் நாடினால் முடிச்சுகளில் ஊதும் பெண்களால் மனிதனுக்கு தீங்கு ஏற்படலாம் எனக் கருதுவீர்களா? இரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றே ஆக வேண்டும்.
2. உங்கள் கருத்துப்படி ''அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் ஒருவருக்கு தீங்கை ஏற்படுத்தலாம்'' என யாரும் நம்பிக்கை கொண்டால் அவர் இணைவைத்தவராக மாறிவிடுவார்.
சரி, மக்கா, மதீனா ஹரத்தின் இமாம்களுக்கு உங்கள் இக் கூற்றை தெரியப்படுத்தி அவர்கள் ''இல்லை, சூனியத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் தீங்கை ஏற்படுத்தலாம்'' எனக் கருதினால் அவர்களுக்குப் பின்னால் யாரும் தொழக்கூடாது என்றும், அவர்கள் மரணித்தால், குளிப்பாட்டவோ, கபனிடவோ, தொழுவிக்கவோ, முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யவோ கூடாது என்றும், ஹஜ், உம்ராவுக்குச் சென்றால் அவர்களின் பின் நின்று யாரும் தொழக்கூடாது என்றும் கூறுவீர்களா?
அல்லது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் மட்டுமுள்ள பத்வாவா?
3. ஒருவர் காபிராக (முஷ்ரிக்காக) இல்லாதபோது தனக்குப் பிடித்த விதத்தில் ''காபிர்'' எனக் கூறினால், கூறியவரின் நிலை பற்றி நபியவர்கள் கூறிய ஹதீஸ் உங்களுக்குத் தெரியுமா?
4. ''சூனியத்தின் மூலம் தீங்கை ஏற்படுத்தலாம்'' என நம்பிக்கை கொள்வது சிலவேளை ஈமானில் குறையை ஏற்படுத்தலாம் என்றோ அல்லது அவ்வாறு நம்பிக்கை கொள்ளாமலிருப்பதே நல்லது என்றோ கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவசரப்பட்டு ''முஷ்ரிக்'' என பத்வா வழங்கிவிட்டீர்கள்.
5. இஸ்லாத்துக்காக சேவை செய்த உங்கள் இறுதிமுடிவு நல்லதாக அமைய வேண்டும் என்ற ஆவலுடன் இவைகளை முன் வைத்தேன். எனவே, அதிகம் சிந்தித்து தமது கூற்று தவறு என்பதை ஏற்று மக்களுக்கு அறிவிப்பது இழிவல்ல. அதுவே உண்மை விசுவாசியின் பண்பு என்பதை உணர்வீர்கள் எனக் கருதுகிறேன்.
மௌலவி அபூ ஸஃத் (இலங்கை)
ரியாதிலிருந்து
E-Mail: muaaz50@yahoo.com.
Allah asfeek ya daie al islam y allah nalla sugathaie kodopaiyaga allah humma asfih zainalabeedeen
ReplyDeleteAllah asfeek ya daie al islam y allah nalla sugathaie kodopaiyaga allah humma asfih zainalabeedeen
ReplyDeleteMay allah bless you forever for healthy life
ReplyDeleteமற்றவன் உதவி தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்குத்தான் சவுதி பணம் வருகிறதே! மற்றவர்கள் அனைவருக்கும் பிறர் ஆறுதல் சொன்னால் மன சாந்தி ஏற்படும். ஆனால் உங்களுக்கு சங்கடம் ஏற்படும்.
ReplyDeleteமற்றவர்கள் அனைவருக்கும் வைத்தியர்கள் அறிவுரை விரைவாக விளங்கும் ஆனால் உங்களுக்கு தாமதமாகவே விளங்கும், என்னே அதிசயம்.
நபி ஸல் அவர்கள் கலிமா பிரகடனம் செய்தார்கள்.நல்ல நசீப் உள்ள மக்கள் ஏற்றார்கள்.
மக்கள் ஏற்கும் வகையில் பல அத்தாட்சிகளை இறைவன் உணர்த்தினான் அப்பவும் அவர்கள் அதை புரியல்ல. அது எல்லாம் இறைவன் புரியாமல் சொல்லவில்லை. ஈமான் கொண்ட மக்கள் மனம் சாந்தி பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த அத்தாட்சிகளை கூறுகிறான்.
Its a lesson for you from Allha, here after dont insult ever insults Awliyas, They are close to Allha than you, Allha likes them and love them than you, cos those Awliyas dedicated the lives towards Allha, not like you, or your sophisticated life, Awliyas never cursed people, never used filthy words as much you do, Please Learn to respect them, dont criticize them in public, What ever goes around comes around PJ
ReplyDeleteபீ.ஜே.அவர்களே ...நீங்கள் தமிழ் முஸ்லிம் உலகிற்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம்...நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் நோய் நொடிகள் இன்றி வாழ்ந்து இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எத்தி வைக்கும் சக்தியை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக...
ReplyDeleteAllah thanathu yehathuvaththey makkalukku eduththu thelivaaha sholla shila poothu shaathaarana varhaleyum therivu sheyhiraan. Avarhalum manitharhal thaan enbathey unartha pala sootheneyhalayum kodukkiraan. Ulahil ehathuvaththey niley naattum poothu innal halayum thunbangalayum veen avathuurukalayum poy kutrashaattukalayum mun senra varhal poolave sahajamaaha ethir nookkineerhal. Ungal paavamgaley athan muulam nichchayam mannikka poothumaanavan. Nooyhaley tharuvathum allah paavamgaley mannikkaththaan enbathu nabimoli. Munpin paavam mannikkappatta Nabi sal avarhale pala murey nooyaal peedikkappattaar enbathu miha thelivu. ALLAH NAADIYATHU NADAKKUM. ETHUVAANAALUM NICCHAYAM ALLAH EHATHUVATEY SOLLUM KUUTTAM ULAHIL UNDAAKKUVAAN. UNGALIL URU KUUTTAM NALLETHEY EAVI THEEYATHEY THADUKKUM AVARHALE VETRI PETTOORHAL ENBATHU IREY VAAKKU. nanmey ethu theemey ethu sunna ethu bidath ethu enru theriyaamal theemayey thadukkaamal meylaal nanmeyey evuhiroom theemeyey thadukkiroom enru palar irukkayil SHATHTIYAM ASHATHIYAM VELIPPADAYAAHA PESHA ANEY VARUM MUN VARUVOOM INSHAA ALLAH.
ReplyDeleteungal nalla niyathukku kuuli nichchayam undu..
All must pray and ask dua from allah for any muslim when he needs allahs help.
ReplyDeleteMay Allah Bless you and every Muslim in both worlds.
ReplyDeleteI kindly advice you to reconsider certain issues you have spoken about Islam, which contradicted with the openions of Many Salaf Imaams from 3 generation of Salaf and the Imaams following the footsteps of those salafs todate.
You have more knowledge than me.. but I kindly ask you to re read Soora Nisah verse 115. which clearly indicates that we should follow the path of Muhmineen (sahaaba).. Howe come we neglect the explanation of learnered sahaabas and say that We can understand the Text of Quran and Hadees batter than them. We did not see Muhammed (sal), We did not learn from Muhammed (sal), We could not correct our self sitting in the majlis of Muhammed (sal), We did not sacrify our family and life for the sake of islam standing side by side to Muhammed (sal), and Allah did not say "Raliyallahu Anhum Waraloo Anhoo" to us but to them.
My dear brother.... if you follow the footsteps of them..insha Allah you will one of our best .
1 out of 73 sects (may be some people can say weak hadees).. but All the learnered Salaf Hadeeth scholars (muhaddiths) confirm it is sahaeeh..
" The one group who succeed is the path on which Muhammed(sal) and His companions were upon. if so how come we simply forget they way sahaab understood and practice islam.
May Allah guide you, me and all in the path of them.
You brother (Abu Nusra from SLK)
அவரது தைரியத்தைப் பாராட்டுகிறோம். அல்லாஹ் அவருக்கு முழுமையான சுகத்தைக் கொடுப்பானாக! நீண்ட ஆயுளையும் வழங்குவானாக!
ReplyDeleteلا بأس إن شاء الله طهور . أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه.
மனிதர்களின் எஜமானே!
ReplyDeleteதுன்பத்தை நீக்குபவனே!
நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை.
நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணபடுத்து!
அல்லாஹுத்த ஆலா உங்களுக்கு பரிபூரணமான சுகத்தையும் வளமான ஆரோக்கியத்தையும் வழங்கிடுவானாக நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து தஃவா பணிகளை மென்மேலும் செய்திட அல்லாஹ் உங்களுக்கு உதவியும் கிருபையும் செய்வானாக!!!
ReplyDeleteபுரண குணமடைந்து உங்கள் தஃவா பணியை தொடர எல்லாம் வல்ல இறைவன் துனைபுரிவானாக ஆமீன்
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் பூரண சுகத்தை வழங்குவானாக!!
ReplyDeleteShafaaka Allah
ReplyDeletemuhumeenukku nallathum nalavuthan kettathum nalauvuthan. ungalukku allah nallathiye tharuvanaga.aameen.
ReplyDeleteமுன்னர் நான் அனுப்பிய பின்னூட்டத்தில் இதனையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
ReplyDelete6. சூனியத்தை பெரும்பாவங்களின் பட்டியலில் நபி (ஸல்) இணைத்தமைக்கான காரணம் என்ன? சூனியத்தால் எந்தத் தீங்கும் செய்ய முடியாவிட்டால் எதற்காக அதனைப் பெரும்பாவமாகக் கருதுவது?
Definitely we will invoke dua on your behalf for quick recovery. Allah puts his people to various tests. This is one for you. To come out of the misery we must ask of Allah (SWT) for forgiveness and ease of difficulties. Once he forgave one, then the Dua will be accepted and, your wishes will be granted. However, there is a saying of Prophet (SAW) which states there is no forgiveness for committing Shirk. sadly, you have uttered that Allah has a figure(shape) of human being including like hands and legs. Surah Ihlas says Allah is like no other creation of his. So where do you stand? Reconsider what you said and done? and return to the true faith?
ReplyDeleteThink well before it's too late, Allah (SWT) is most forgiving.
First, seek the blessings of almighty Allah and then ask the doctors for help. This is what Ahlus Sunnath Wal Jamath believes and does. This is not shirk. However, it sounds like you almost totally (90%)in belief of Doctors (human being in your term). If that is the case, seek the assistance of those Awliyas in your neighbourhood whom would love to help you. Finally, I honestly seek Allah's protection for you and may Allah (SWT)grant his blessings so that you could return to the truth and guide those misguided by your teachings . Ameen
Abdul Wahid - UK
Shafaakallahu minas sartan wa shafa annasa min sartaanika aameen
ReplyDeletealhamthulilla allah ungalukku neenta aayulai thara vantum
ReplyDeleteanbu.sakotharar.pj in sukathukku en kudumbatharin niraivaana pirarthanaikal......ungal poorana sukathukku valla nayakan arulpureevanaka..aameen..aameen...
ReplyDelete