Header Ads



அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு திரும்பபெறப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்றுதிரும்பபெறப்பட்டது. 

அசாத் சாலி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மனுவை திரும்ப பெறுவதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜே.சி வெலியமுன உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதனடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கே.ஸ்ரீபவன், சலிம் மர்சுக், பியசாத் டெப் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. காவற்துறை மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

4 comments:

  1. Ullai Poivanthal Arasiyal Vathikalien Nielai Ethuthan
    Suodu Padda Punai Miendum Aduppankarai Povathu
    Nienkal Niepanthanial Veeduthali Seiyappaddathu Unmai
    =============Kalmunai Mohamed Fowse================

    ReplyDelete
  2. அசாத் சாலி மற்ற அரசியல் வாதிகளை கொரங்கன் என்று சொல்வது மாதிரி, நாம் இப்போது இந்த ஆசாத்தை ஒரு ஒரங்கனாகத்தான் பார்க்கவேண்டி உள்ளது. பெசன் பக் வழக்கு வாபஸ் பெறப்பட்ட போது இந்த ஒரங்கன் சொன்னார், அரசாங்கத்தின் வற்புறுத்தலிநால்தான் அந்த வழக்கு மீளப்பெறப்பட்டது என்று. ஆனால், இன்று இந்த ஓரங்கன் அதுவும் அவருக்குரிய வளக்கை வாபஸ் பெற்றது யாரின் அழுத்தத்தாலாம்? எல்லா அரசியல் வாதிகள் போல் ஒரே குட்டயில் ஊறின மட்டைதான் இந்த அசாத் சாலிஹ். மாறாக இவரின் குரல் முஸ்லிம் சமூகத்துக்காக அல்ல. மக்கள் இனியாவது இவர் பற்றி தெளிவு பெற வேண்டும் நிதானமாக இருக்க வேண்டும்.

    நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்வது, இந்த அசாத் என்பவர் இந்த அரசின் மறைமுக கைப்பொம்மை என்பது நாளடைவில் உறுதிப்படுத்தப்படுகின்றது.

    எதற்குமே வக்கில்லாத நிலயில், முஸ்லிம்களுக்கென்று தற்போதைக்கு கையில் உள்ளது பலமான கட்சி SLMC என்று கருதப்படுகின்ற நிலைப்பாட்டை பல துண்டு துண்டாக உடைக்க அரசால் செய்யப்படுகின்ற சதியின் மூல கோடாரிக்காம்புதான் இந்த அசாத் என்கின்ற அரசின் துரும்பு. அரசின் அந்த வியூகம் நிட்சயம் வெறிபெறும் நம்மவர்கள் போலி கோஷங்களுக்குத் துணை போகும் வரயில்.

    ReplyDelete
  3. மறைவானவற்றை இறைவன் மட்டுமே அறிவான் இன்ஸா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  4. can azath sally reply to slahy"s allegation.its a common allegation,that azath sally is a present government agent.

    ReplyDelete

Powered by Blogger.