ஆஸாத் சாலி தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்..?
(உதயன்) கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் அவரது செயற்பாடுகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களை ஆயுதப்போராட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார் அதன் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்ததாக பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இவருடைய கூற்று தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் குறித்த சஞ்சிகை திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்டதாகவும் அசாத் சாலி, சத்தியக்கடதாசி மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட போதிலும், அசாத் சாலியின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனி பேசுவார் ஆனா பேச மாட்டார்? இனியாவது நடப்பவைகளை போலிஸ் இன்றி மூலம் சட்டபடி அனுக தலைமைதாங்களாமே இவர்? மக்களின் ஹீரோ ஹீரோவாக நடக்கும் பிரச்சினைகளை சட்ட உதவியுடன் தீர்க போராட முன் வரவேண்டும்
ReplyDeleteகவனிக்கவேண்டியது ஆசாத் சாலியல்ல பொதுபலசேனவுடன் தொடர்புள்ள பாதுகாப்பு அமைச்சர் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் படுபயங்கரவாதி கொத்தா தான் பயங்கரவாதியென்று நாங்கள் சொல்லவில்லை நாட்டிலுள்ள அனைவரும் சொல்கின்றார்கள் முக்கியமாக சிங்கள மக்களதான் சொல்கின்றார்கள். அத்துடன் ஆசாத்சாலியின் கைது ஒரு தனிப்பட்ட பளிவாங்கலே தவிர ஆதரபூர்வமானதோ மனிதாபிமான முறையிலானதோ அல்ல அதேவேளை அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சு தமது சொந்தப்பழிவாங்கல்களுக்காக தாம் நினைத்தவாறெல்லாம் மக்களை கைது செய்வதும் நினைத்தவர்களை வெளியில் விடுவது ஓர் ஒளுங்கற்ற ஆட்சி நடப்பதையே உலகிற்கு வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றது. இது மிகவும் தண்டிக்கப்படவேண்டிய விடயம் இவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களாலும் பரவாயில்லை அதிகாரத்துஸ்பிரயோகங்கள் கண்டிக்கத்தக்கவையே....
ReplyDeleteஆசாத் சாலி தொடர்ந்தும் கவனிக்கப்படுவார் என்று சொல்வது ஏன் என்றால் மீண்டும் ஒரு பொய் சொல்லி கைது செய்து உள்ளே போடத்தான் இவர்களுடைய அநியாயங்களுக்கு முடிவே இல்லையா
ReplyDelete