சிரியாவை விட்டு ஒடுங்கள் - ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம் போராளிகள் எச்சரிக்கை
சிரியாவை விட்டு ஹிஸ்புல்லா 24 மணி நேரத்தில் வெளியேறா விட்டால் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்த நேரிடும் என்று சிரிய அரசுக்கெதிராக போராடி வரும் சிரிய போராளிகள் எச்சரித்துள்ளனர்.
சிரிய அதிபர் பஷர் அல் அசதுக்கு எதிராக சிரியா போராளிகள் சிரியா விடுதலை படை எனும் பெயரில் போராடி வருகின்றனர். ஈரானை தவிர பிற அரபு நாடுகள் சிரியா போராளிகளை ஆதரித்து வருகின்றது.
சிரிய போராளிகளுக்கு கத்தர் ஆயுத உதவி தருவதாக சொல்லப்படும் நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக ஈரானும் லெபனானில் உள்ள ஷியா பிரிவு படையான ஹிஸ்புல்லாவும் ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. இது வரை தாம் சிரியா போரில் பங்கெடுக்கவில்லை என்று கூறி வந்த ஹிஸ்புல்லா லெபனான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள 13 கிராமங்களில் உள்ள ஷியாக்களை பாதுகாக்க மட்டும் சிரியவில் தங்கள் படைகள் உள்ளதாக தெரிவித்தது.
ஆனால் குஸைர் எனுமிடத்தில் நடந்த போரில் சிரிய படைகளோடு சேர்ந்து ஹிஸ்புல்லாவும் சிரிய போராளிகளுக்கு எதிராக போரிட்டது. இப்போரில் 79 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதோடு தங்கள் இயக்கம் பஷர் அல் அசாதுக்கு ஆதரவாக செயல்படும் என ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா அறிவித்தார்.
அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சிரியா விடுதலை படையின் தலைவர் இத்ரிஸ் சிரியாவில் ஹிஸ்புல்லா தங்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் நிறுத்தாவிட்டால் நரகிற்கு சென்றாலும் அவர்களை பிடித்து கொல்வோம் என கூறியுள்ளார்.
தாம் இது வரை கொடுத்த எந்த வாக்குறுதியும் 24 மணி நேரத்திற்கு பின் ஹிஸ்புல்லாவை வேட்டையாடுவதை கட்டுப்படுத்தாது என்றும் அப்படி ஹிஸ்புல்லாவின் மேல் தாக்குதல் நடத்தப்படுமானால் அதை சர்வதேச சமூகம் கண்டிக்க கூடாது என்றும் இத்ரிஸ் கூறினார். தம்முடையை பேட்டியில் தம்முடைய கோரிக்கையை லெபனான் அதிபர், ஐநா சபை தலைவர் மற்றும் அரபு லீக் தலைவரை நோக்கி கூறுவதாக இத்ரிஸ் கூறினார். inneram
good
ReplyDelete