Header Ads



தேரரின் இறுதிச்சடங்கில் அமைச்சர் மீது தண்ணீர் போத்தல் வீச்சு, ஆதரவாளர்கள் குழப்பம்

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடைசெய்யக் கோரி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து இறந்த பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்கு நேற்றுமாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது. 

இரத்தினபுரி கஹவத்தையில் உள்ள பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கின் போது வன்முறைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால், ஏராளமான காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் இராணுவத்தினர்  குவிக்கப்பட்டிருந்தனர். 

நேற்று மாலை நடைபெற்ற இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பௌத்த பிக்குகள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இன்றி இறுதிச்சடங்கு இடம்பெற்றது. 

எனினும் அரமைச்சர் ஜோன் செனிவிரத்ன உரையாற்றிய போது கூச்சல் போட்டு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களும் பௌத்த பிக்குகளும், அவர் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். 

பின்னர் ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர், அமைச்சர் ஜோன் செனிவிரத்னவை பேச விடுமாறு கேட்டுக் கொண்டார்.  இந்தநிலையில் ஜோன் செனிவிரத்னவின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. இந்த தேரர் மாட்டுக்காக சாகவுமில்லை ஆட்டுக்காக சாகவுமில்லை கடன் தொல்லை தாங்கமுடியாம செத்ததாகத்தான் தகவல் உழல் மோசடியில் வேறுவழியில்லாமல் செய்யப்பட்டவேலைதானாம் இது....

    ReplyDelete
  2. Nothing to tel about him, because he is stoopit.

    ReplyDelete

Powered by Blogger.