உலக தொலைத்தொடர்பு தினம்
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, உலகிலுள்ள அனைத்து விஷயங்களும் உள்ளங்கையில் அடங்கி விட்டது. இன்டர்நெட்' மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே 17ம் தேதி உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1969 மே 17ல் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது.
உலகில் 1937ல் கண்டுபிடிக்கப்பட்ட முதல் "எலக்ட்ரிக் டெலிகிராப்', முதல் தற்போதுள்ள புதிய தொழில்நுட்பங்கள் வரை, தொலைத்தொடர்பு துறை பல்வேறு பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன. இன்டர்நெட், மொபைல் போன், டிவி போன்றவை, தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன. இதன் அசுர வளர்ச்சியால், உலகின் எல்லைகள் சுருங்கி விட்டன. இருப்பினும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, கடைசி கிராமப்புற பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும்.
Post a Comment