பொதுபல சேனாவின் சவாலை ஏற்கமுடியாது - விமல் வீரவன்ச
பொதுபல சேனாவின் சவாலை ஏற்றுக்கொள்ள தாம் தயாரில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பொதுபல சேனாவுக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்
எனினும் அதனை நிரூபிக்குமாறு பொதுபல சேனா சவால் விடுத்திருந்தது. பொதுபலசேனா, நோர்வேக்கு சென்று திரும்பிய செய்தி தொடர்பில் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்துக்கு பதிலாகவே பொதுபல சேனா இந்த சவாலை விடுத்திருந்தது
எனினும் தாம் நோர்வேக்கு சென்றதாக பொதுபலசேனா அமைப்பு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செய்தி தொடர்பிலேயே தாம் தமது கண்டனத்தை வெளியிட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார், sfm
அப்ப நீயும் பொதுபலசேனவின் சொந்தக்காரன்தானா?
ReplyDeleteஇவர் முன்னர் ஜனாதிபதிக்காக உண்ணாவிரத நாடகம் ஒன்று நடித்தாரல்லவா? இப்போது புதிய ஒரு நாடகம் அரங்கேற்றாரு. உள் நோக்கம் புரியாமல் யாரும் நம்ப வேண்டாம். ஜனாதிபதியும், அவரது குடும்பமும், கோத்தாவும், பொதுபல சேனாவும், விமல் வீர வன்சவும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள். கவனம்.
ReplyDelete