Header Ads



கிளிநொச்சியில் நில அளவை அலுவலகம்


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

கிளிநொச்சியில் இலங்கை நில அளவைத்திணைக்களத்தின் பிரதேச நில அளவை அலுவலகம்  28 மே 2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார  அபிவிருத்தி அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

கைத்தொழில், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட்பதியூதீன்,  காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத்,பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அமைக்கப்பட்ட ரூபா 26 மில்லியன்  செலவில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் திறப்பு விழா நிகழை்வுகள் கிளிநொச்சி மாவட்ட மீள் எழுச்சித்திட்டம் மற்றும் வடக்கின் துரித மீட்சித்திட்டம் ஆகியவற்றின் பிரதிதிட்டப்பணிப்பாளர் விஜகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப்பணிப்பாளர் லியனகே, நில அளவையாளர் நாயகம் மகேஸ் பெர்னாண்டோ, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.