அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்தான் அசாத் சாலி - கோத்தா
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசாங்கங்கள் செய்த தவறை தாம் மீண்டும் ஒருபோதும் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தினரின் நிலை கொள்ளல் அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படைகளின் நிலைகொள்ளல் அற்பமான விடயம், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்புகளும், ஒரு பகுதி ஊடகங்களும், பாதுகாப்பு விவகாரங்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகின்றன.
முன்னைய அரசாங்கங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விட்ட தவறுகளால் நாடு மிகக் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ளது. அதே தவறை மீண்டும் செய்வதற்கு நான் தயாராக இல்லை.
போருக்குப் பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இராணுவத் தலையீடுகளால் முழுமையான குடியியல் ஆட்சியை ஏற்படுத்துவதில் தடங்கல்கள் உள்ளதாக, குற்றச்சாட்டுகளைக் கூறுவோர், 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. யாழப்பாணத்தில் மட்டுமன்றி வன்னியிலும் கூட படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
ஆயுதப்படைகளின் நிலைகொள்ளலானது, ஒரு அரசியல் விவகாரமாகவோ, எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின் கலந்துரையாடலுக்கான விவகாரமாகவோ இருக்கக் கூடாது. எத்தகைய நிலையை எதிர்கொள்வதற்கும் ஏற்ற தயார் நிலையில் ஆயுதப்படையினர் இருக்க வேண்டும்.
மீண்டும் தீவிரவாத எழுச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கான பலமான அரணாக ஆயுதப்படைகளின நிலைகொள்ளல் அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் படைகளின் நிலைகொள்ளலை சில அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிரான செயற்படும் அத்தகையவர்களில் ஒருவர் தான் அசாத் சாலி.” என்றும் கோத்தாபய ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeletewhat about this BBS are there good Party? what is this Mr Gotabe try to make problem to Government
ReplyDeleteMr. Gothapaya avarkale pala idankalil neenkal pesivarum pechchukkalaal muslim makkalai apaayakaramaakayum, atchchuruthuvathaakayum ullathu. Thayayu seithu meendum meel pariseelanai seithu paarunkal vilankum
ReplyDeleteயாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக பூனை கண்ணை மூடிக்கோண்டு சாப்பிடுமாம். அதுபோலதான் இருக்கு கருத்து. என்னதான் நீங்க சொன்னாலும் நீங்க நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் ரொம்பவும் அதிகமான துரோகங்கள் செய்து வருகின்றீர்கள்.
ReplyDeletepadathin payar yawum cartpani
ReplyDelete