ராணுவ வீரர்களின் கண்ணைக் கட்டி சுட்டுக் கொன்ற போராளிகள்
சிரியாவில் ஆசாத்தின் படை வீரர் ஒருவர், இறந்து கிடந்த போது, அல்-நுஸ்ரா இயக்கப் போராளி, அந்த வீரனின் நெஞ்சைக் கத்தியால் கிழித்து, இதயத்தை சுவைப்பது போல் எடுத்த காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் தாக்கம் தணிவதற்குள், யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு காட்சி மனதை உறைய வைக்கின்றது.
போராளிகளுக்கு எதிராக அதிபர் ஆசாத் நிறைவேற்றிய படுகொலைகளை நடத்துவதில் பெரும்பங்கு வகித்ததாகக் கருதப்பட்ட 11 பேர், புரட்சிப்படையினரான அல்- நுஸ்ரா இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளால் சுட்டுக் கொல்லப்படுவது போன்ற காட்சி யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
11 வீரர்களும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டுள்ளனர். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் முழங்காலிட்டு குனியும்போது, பின்னால் இருக்கும் ஒருவர் அவர்களின் பின்னந்தலையில் சுட்டுக் கொல்வதாக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
டெயிர் அல் சாரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷரியா நீதிமன்றம், சிரியாவில் உள்ள நமது சகோதரர்களையும் அவர்களது குடும்பத்தையும் அழித்த இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கின்றது என்று, இந்த தண்டனையை நிறைவேற்றிய போராளி தெரிவிப்பதாக காட்சிகள் முடிவடைகின்றன.
Islamic jihad and this war going different direction.
ReplyDeleteமுஸ்லிம்களை கொடுமைக்காரர்களாக உலகுக்குக் காட்ட விரும்பும் மேற்குலகின் சதிகளில் ஒன்றாகவும் இது புனையப்பட்டிருக்கலாம்
ReplyDelete