சஜித் பிரேமதாஸாவின் வேதனை
(ADT) தனது அரசியல் முதிர்ச்சி வீதம் குறைவு எனவும் தான் அதிகம் அவசரப்பட்டுவிட்டதாக கண்டுகொண்டதாகவும் ஐதேக முன்னாள் பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரதேமதாஸ தெரிவித்துள்ளார்.
தனது குறைசெயற்பாட்டை தவிர்த்து பிழையை சரிசெய்து முதிர்ச்சியான அரசியல் பாதையில் செல்ல முயற்சிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தமிழ் - சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் ஐதேக தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சஜித் கூறியமை தொடர்பில் ரிவி தெரணவில் அவர் கலந்து கொண்ட ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.
கட்சி யாப்பு மாற்றத்தின் மூலம் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட வேண்டும் என தான் எதிர்பார்த்ததாகவும் அது வெற்றியளிக்கும் என தான் நம்பியதாகவும் சஜித் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய செயற்குழுவில் பலமுறை யோசனை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
துரதிஷ்டவசமாக தனது யோசனைக்கு இரண்டு எம்பிக்கள் மாத்திரமே ஆதரவு வழங்கியதாக சஜித் கவலையுடன் கூறியுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவத்தை தான் ஏற்பதா என்று தன்னால் தனியாக தீர்மானிக்க முடியாது எனவும் கட்சியின் தேசிய சம்மேளனம், செயற்குழு கூட்டம், எம்பிக்கள் குழு அதனை தீர்மானிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
Post a Comment