பாராளுமன்றத்தில் இன்றும் ஆஸாத் சாலி விவகாரம்
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட அனுமதிக்க முடியுமா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (09) பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
அசாத் சாலி கைது குறித்து இன்று பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் விசேட உரை ஒன்றை ஆற்றினார்.
அசாத் சாலியின் குடும்பத்தினர் தன்னை சந்தித்ததாகவும் அசாத் சாலியை பார்வையிட வாய்ப்பு பெற்றுத் தருமாறு தன்னிடம் அவர்கள் கோரியதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி அசாத் சாலியை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு வாய்ப்பு பெற்றுத் தர முடியுமா என எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
அதன்போது பாராளுமன்ற சபாநாயகர் ஆசனத்தில் இருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இது குறித்து சபாநாயகருக்கு அறிவித்து பின்னர் பதில் அளிக்கப்படும் என குறிப்பிட்டார். Adt
Post a Comment