Header Ads



இலங்கைக்கு மீண்டும் வந்தார் சவூதி அரேபிய தூதுவர்


திருப்பி அழைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு கடந்த ஜனவரி 9ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் கடந்த ஜனவரி 9ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.

இதனையடுத்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை 24 மணித்தியாலங்களிற்குள் நாடு திரும்புமாறு சவூதி அரேபிய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அறிவித்தது.

இந்நிலையில் சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக வீ.கிருஷ்ணமூர்த்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்தே இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.