நிந்தவூர் பிரதேச கல்வி முன்னேற்றத்திற்காக ஒன்றுபட பாடசாலை அதிபர்கள் தீர்மானம்
(சுலைமான் றாபி)
நிந்தவூரில் காணப்படும் பாடசாலை மாணவர்களின் அடிப்படை மற்றும் சிரேஷ்ட கல்வியை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்று அவர்களை சிறந்த மாண்புமிக்க மாணவர்களாகவும், எதிர்கால தலைவர்களாகவும் உருவாக்குவதற்காக வேண்டி நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக பாடசாலை அதிபர்கள் அனைவரும் (31.05.2013) வெள்ளிக்கிழமை நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி பாடசாலையில் சந்தித்தனர். நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 16 பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் பிரிவு அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை அதிபர்கள் மத்தியில் இந்த சந்திப்பின் முக்கியத்துவம் பற்றி கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் அவர்களும் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் எஸ்.ஏ.எஸ்.எம். சம்சுடீன் மௌலானா அவர்களும் உரை நிகழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமொன்றாக அவதானிக்கப்பட்டது.
இதேவேளை நிந்தவூரின் எதிர்கால கல்வி அபிவிருத்தியை சீர்செய்யும் பொருட்டு பாடசாலை அதிபர்களைச்சேர்த்து கல்வி அபிவிருத்திற்கான அமைப்பொன்றை உருவாக்குவதற்கு பாடசாலை அதிபர்களால் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை இந்த விஷேட சந்திப்பை இமாம் கஸ்ஸாலி பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். அச்சி முகம்மட் அவர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தது நமது ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும் !!
Post a Comment