Header Ads



முழு தேங்காயை பற்களால் 8 வினாடிகளில் உரிக்கும் 63 வயது முதியவர்


மட்டையுடன் கூடிய முழு தேங்காயை தனது உறுதியான பற்களால் எட்டே வினாடிகளில் உரித்து, 63 வயதிலும் சாதனை படைத்து வருகிறார், பனாமா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெஸ் கார்டின்.

 கடப்பாரை மற்றும் அரிவாளின் உதவியின்றி 6 மணி நேரத்திற்குள் 500 தேங்காய்களை என்னால் உரிக்க முடியும்.

 இந்த சாதனையின் மூலம் கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என்று கூறுகிறார், இவர்.

 இவர் அசுர வேகத்தில் தேங்காய் மட்டைகளை பல் மற்றும் கைவிரல்களினால் பிய்த்துத் தள்ளும் அழகை ஏராளமான ரசிகர்கள் தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் பிரமிப்புடன் படம்பிடித்து செல்கின்றனர்.

 தனது தொழில் அனுபவத்தை விவரிக்கும் ஆண்ட்ரெஸ் கார்டின், ‘பல்லினால் தேங்காய் உரிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. இதற்கு தாடையில் சக்தி வேண்டும். பற்களில் சக்தி வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும்’ என்கிறார்.

No comments

Powered by Blogger.