அமெரிக்காவில் 4 வயது மேயர்
அமெரிக்காவில், நான்கு வயது சிறுவன், மேயராகியுள்ளான். அமெரிக்காவின், மின்னிசோட்டா மாகாணத்தில் வசிப்பவன், ராபர்ட் டப்ஸ், 4. இன்னும், பாலர் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அமெரிக்காவில், 22 பேர் மட்டுமே வசிக்கும், "டோர்செட்' நகரத்தின் மேயர். இந்நகர மக்கள், கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில், டப்சை, மேயராகத் தேர்ந்தெடுத்தனர்.
"மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டப்ஸ், ஒரு பொது நல விரும்பி; அவன் பெரிய படிப்புகளை இன்னும் முடிக்கவில்லை. ஆனால், மக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினான். முதியோர்களின் கைத்தடிகளைப் பிடித்து, சாலையை கடக்கச் செய்வான்; நன்றாக மீன் பிடிப்பான்' என, டோர்செட் நகர பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"மேயர் மிகவும் அழகாகப் பாடுவார்; நன்றாக நடனம் ஆடுவார்; மேலும், மக்கள் மிகவும் கவனமாக தெருக்களைக் கடக்க சொல்லிக் கொடுப்பார்' என, மின்னிசோட்டா பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவெல்லாம் பரபல்யத்தைப் பெறுவதற்காக அமெரிக்கா செய்யும் வினோதங்கள். இது ஒன்றும் சாதனையில்லை. சும்மா ஒரு வேடிக்கை. அவ்வளவுதான்.
ReplyDelete