சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 400 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 400ற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி வரவழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்திற்குள் சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டிற்கு திருப்பியழைக்க எண்ணியுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த காலப்பகுதிக்குள் அபராதம் செலுத்தாமல் நாடு திரும்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டுக்களை பணியாளர்களே கொள்வனவு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். nf
Post a Comment