முஸ்லிம் லீக்கின் 34 வருடப்பூர்த்தி விழா
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
எதிர்வரும் 09.06.2013 அன்று அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் 34 வருடப்பூர்த்திவிழா அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ்,அதிதிகளாக வை.எம்.எம்.எ.தேசியத்தலைவர் கே.என்.டீன்,முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் றசீத் எம்.இம்தியாஸ் சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வில் 40 வருடங்கள் சிறப்பான முறையில் சமூகசேவை செய்த எம்.ஐ.உதுலெப்பை ஜே.பி அவர்கள் (தேசியப்பணிப்பாளர்) பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளார். இதனைத்தொடர்ந்து பல துறைகளிலும் சேவை புரிந்த 34 சமூகசேவகர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.நிகழ்வுதொடர்பான நினைவு மலரும் வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் அன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.
உயிர்நீத்த முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் ஞாபகார்த்தமாக ஹத்தமுல் குர்ஆனும் ஓதப்படவுள்ளது. விழாசிறப்புற நடைபெறுவதற்கான எற்பாடுகளை ஏற்பாட்டுக்குழுவினர் செய்துவருகின்றனர்.
Post a Comment