30 ஆம் திகதிக்கு முன் காமினி பெரேராவை, மதுஷங்கவின் பெற்றோர் மன்னிப்பார்களா..?
(Nf) சவுதி அரேபியா உட்பட சில மத்திய கிழக்கு நாடுகளில் 15 இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அபு தாபியில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள சிலாபத்தைச் சேர்ந்த குறித்த நபருக்கு கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மன்னிப்பு வழங்காவிடின் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
'சிலாபம் - மெதவல பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் மதுஷங்க என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அபு தாபியில் கொலை செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. தற்போது அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மே மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள காமினி பெரேராவிற்கு, கொலை செய்யப்பட்ட மதுஷங்கவின் பெற்றோரிடமிருந்து மன்னிப்பு வழங்கப்படாத பட்சத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். சிலாபத்தினைச் சேர்ந்த உயிரிழந்த பிரதீப் மதுஷங்கவின் பெற்றோரிடம் அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவே சிறந்த செயலாகும்,' என்றார் பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா.
மன்னித்தல்! மனிதனுக்கு இறைவன் வழங்கிய மாபெரும் அருட்கொடை!!
ReplyDeleteநாமும் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்காக இன்று விதைப்போம். மறுமையில் அறுவடை பயன்தரும்!!