2 உலகப் போர்களை பார்த்த ஆமை, எலி கடித்து இறந்தது
130 வயதுடைய பழமையான ஆமை, எலி கடித்ததில் பரிதாபமாக இறந்தது. பிரிட்டனில் பழமையான ஆமை ஒன்று இருந்து வந்தது. 1892-ம் ஆண்டில் பிறந்த இந்த ஆமைக்கு தற்போது 130 வயதாகிறது. “தாமஸ்” என்பது இதன் பெயர். இரண்டு உலகப் போர்களை இந்த ஆமை பார்த்துள்ளது. இந்த ஆமையை லீ கேலீஸ் என்பவர் பாதுகாத்து வந்தார்.
கடந்த நில நாட்களுக்கு முன்பு கார்டன் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த மூதாட்டி ஆமையை அங்கு வந்த எலி ஒன்று காலில் கடித்து விட்டது. இதில் புண் ஏற்பட்டு அவதிப்பட்ட தாமஸ் ஆமை இறந்து விட்டது.
எனவே குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆமை இருந்து வந்தது. 1992-ம் ஆண்டு எனது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக இந்த ஆமை கிடைத்தது. கார்டனில் நடமாடிக் கொண்டிருந்து ஆமை, எலி கடித்ததில் காலில் புண் ஏற்பட்டது. 5 நாட்களாக அதற்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார் அதன் உரிமையாளர் லீ கேலீஸ்.
இதுபோன்ற இரண்டு ஆமைகளை கொழும்பு நூதன சாலையில், என்னுடைய சிறு வயதில், பார்த்த ஞாபகம்; அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ReplyDeleteATHU IPPOTHUM UNDU UNDEVARIN VAITRIL
ReplyDelete