27 வருடங்களின் பின்னர் புகையிரத சேவை
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கையின் போக்குவரத்து சேவையில் மற்றுமொரு வரலாற்று பதிவாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை அமைந்துள்ளது.
கொழம்பிலிருந்து இலகுவாக தலைமன்னாரை சென்றடைந்து கொள்ளும் வகையில் இப் புகையிரத சேவை மக்களுக்கு பெரும் வசதி செய்து கொடுத்தள்ளது.இன்று காலை உத்தியோகபூர்வமாக இந்த சேவையினை பொருாளதார அபவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,நெடுஞ்சாலைகள் அமைச்சர் குமார வெல்கம,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே கான்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
கடந்த 27 வருடங்களின் பின்னர் மதவாச்சியிருந்து இந்த சேவை முதற் கட்டமாக மடு வரை இடம் பெருகின்றது.அதனையடுத்த இரண்டாம் கட்டமாக மடுவிலிருந்து மன்னார் ஊடாக தலை மன்னாருக்கான சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தற்போது மடுவிலிருந்து தலைமன்னாருக்கான பாதை புனரமைப்பு பணிகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment