23 வருடங்களின் பின் மன்னார் செல்லும் புகையிரதம்
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
இரு தசாப்தங்தகளிற்குப் பின்னர் மதவாச்சி தலைமன்னார் புகையிரதவீதியல் மீண்டும் புகையிரத சேவை நடைபெறவுள்ளது. இச்சேவை 14.05.2013 அன்று அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.இப்புகையிரத சேவை முதற்கட்டமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மடுறோட் வரை செல்லவுள்ளது. அதிதிகள், அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் இப்புகையிரதத்தில் பயணம் செய்யவுள்ளனர்.
கடந்தகால யுத்தத்தால் புனகயிரத நிலையங்கள்,புகையிரத வீதி போன்றன முற்றாக அழிக்கப்பட்டன.1914 முதல் பிரதி;த்தானியரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தலைமன்னார் புகையிரத சேவை பயங்கரவாதப்பிரச்சினையால் 1990 ஜுன் மாதம் இடைநிறுத்தப்பட்டது.இதனால் மன்னார் பிரதேச பொதுமக்களும்,வியாபாரிகளும்,அரச ஊழியர்களும் வெகுவாகப்பாதிக்கப்பட்டனர்.குறிப்பாக அரச ஊழியர்கட்கு 03 சோடி புகையிரத வரண்டுகள்(ஆணைச்சீட்டுக்கள்)வழங்கப்படுகிறது.இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகப்பயணம் செய்யலாம்.ஆனால் அந்த வாய்ப்பை இதுவரை மன்னார் அரச ஊழியர்கள் இழந்திருந்தனர்.எட்டாக்கனியாக இருந்த அந்த ஏக்கத்திற்கு மஹிந்த சிந்தனையூடாக வடக்கின் வசந்தத்தின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
இந்த ரயில் சேவைமூலம் கடந்தகாலங்களில் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் வருவோர் இலகுவாக கொழும்பை அடையும் வர்ய்ப்பையும் பெற்றுவந்தனர்.கொழும்புப்பயணிகள் இலகுவில் இராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பையும் பெற்றிருந்தனர்.இப்புகையிரத சேவையுடன் இணைந்ததாக இராமானுஜம் கப்பல்சேவை.லங்காராணி கப்பல் சேவை என்பனவும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வீதியில் அமைந்திருந்த முக்கிய புகையிரத நிலையங்களாவன, நேரிய குளம்.செட்டிகுளம், மடுறோட், முருங்கன், மாந்தை, சவுத்பார்(மன்னார்), தோட்டவெளி, பேசாலை, தலைமன்னார்.
தலைமன்னார் மதவாச்சி புகையிரத வீதியின் தூரம் 106 கி.மீ ஆகும்.இதனை இருகட்டங்களாகப் பிரித்து புனரமைப்புச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.முதற்கட்டமாக மதவாச்சியில் இருந்து மடுவரையான புகையிரதவீதி 43 கி.மீ 81.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு;ள்ளது.இதன் அடுத்த கட்டம் மடு தொடக்கம் தலைமன்னார் வரையான வீதி 63 கி .மீ 140 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன்பின்னர் தலைமன்னார் புகையிரத சேவை வழமைக்குத்திரும்பிவிடும். இப்புகையிரத வீதியின் மீள்நிர்மானப்பணிகளை வரையறுக்கப்பட்ட இந்தியன் புகையிரத நிர்மானிப்புக்கம்பனி சிறப்பாகச் செய்துவருகிறது.
Post a Comment