Header Ads



ஏறாவூர் புன்னைக்குடா வீதி 18 கோடி ரூபா செலவில் நிர்மாணம்



(அப்துல்லாஹ்)

ஏறாவூர் புன்னைக்குடா வீதியை கார்பெற் இட்டு நவீன சாலையாக மாற்றும் பணிகள் நேற்று புதன்கிழமை (15.05.2013) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வீதி 180 மில்லியன் ரூபாய் செலவில் இருவழிப்பாதையாக நவீன முறையில் நிர்மாணிக்கப்படுகின்றது.

புன்னைக்குடா வீதியின் பாலங்களும் மற்றும் மதகு அமைப்புப் பணிகளும் கான்கள் கட்டும் வேலைகளும் ஏற்கெனவே முடிவுற்றுள்ள தறுவாயில் நேற்றைய தினம் வீதிக்குக் கார்பெற் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

ஏறாவூர் நகரபிதாவும் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அலிஸாஹிர் மௌலானா புன்னைக்குடா வீதிக்குக் கார்பெற் இடும் பணிகளை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல்வேறு அதிகாரிகளும் ஊர்ப் பொது மக்களும் கலந்து கொண்டனர்.



1 comment:

Powered by Blogger.