அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை - எப்.பி.ஐ.
அமெரிக்காவில் மேலும் குண்டுவெடிக்கும் என்ற அச்சுறுத்தல் ஏதும் இல்லை என எப்.பி.ஐ., அறிவித்துள்ளது. பாஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள எப்.பி.ஐ., : அமெரிக்காவில் மேலும் குண்டு வெடிக்கும் என்ற அச்சுறுத்தல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் மீட்பு பணிக்கு உதவிய போலீசார், மீட்பு படையினர் மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். குற்றவாளிகளை கண்டுபிடிக்க வெடிகுண்டு தடுப்பு படையினரும், விசாரணை அமைப்பினரும் தீவிரமாக உள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொது மக்களிடம் வீடியோ ஆதாரங்களை எதிர்பார்க்கிறோம். பொது மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் அதிபர் ஒபாமா உறுதியாக உள்ளார் என கூறியுள்ளது.
Post a Comment