காத்தான்குடி மத்திய கலாசார நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி மத்திய கலாசார நிலையத்தில் 2012ம் ஆண்டு சிங்களம்,கலை இலக்கியம்,கௌன்ஸலிங் போன்ற கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் காத்தான்குடி மத்திய கலாசார நிலைய உத்தியோகத்தர் அஷ்ஷெயக் எம்.எம்.எம்.அன்சார் (மக்கி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரி உப அதிபர் மௌலவியா ஸில்மியா தாரிக்,தாறுஸ்ஸலாம் பாலர் பாடசாலை அதிபர் பௌமிய ஷரீப், ;தான்குடி மத்திய கலாசார நிலைய சிங்கள பாட ஆசிரியர் றிஸ்வி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 2012ம் ஆண்டு சிங்களம்,கலை இலக்கியம்,கௌன்ஸலிங் போன்ற கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேசிய வாசிப்பு மாதப் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment