சவூதி அரேபியாவில் அவதிப்படும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை
(NF) சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள சர்சியா பாலத்திற்கு அருகில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு பொது மன்னிப்புக் காலத்தை கோரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சவுதி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
பல நாட்களாக ஜித்தா நகரிலுள்ள சர்சியா பாலத்திற்கு அருகில் தங்கியுள்ள தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக அங்கிருக்கும் இலங்கைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜித்தாவிலுள்ள கென்சியூலர் அலுவலகத்தில் ஆண் பணியாளர்களை தங்கவைப்பதற்கான தங்குமிட வசதிகள் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பில் சவுதி தொழிற்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மன்னிப்புக் காலம் கிடைத்ததன் பின்னர் அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment