சிங்கள, முஸ்லிம் நல்லுறவை ஏற்படுத்த எகிப்தில் விளையாட்டு போட்டி
(எகிப்திலிருந்து எச். பைஸ்)
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19-04-2013) அன்று எகிப்தில் இலங்கை தூதரகத்தினால் மாபெரும் விளையாட்டு போட்டி ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு போட்டி இங்கு வாழும் இலங்கை முஸ்லிம் மற்றும் பௌத்த மக்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சில பௌத்த தீவிரவாத அமைப்புகளால் மேட்கொள்ளப்படும் எதிர் செயற்பாடுகளுக்கு எல்லா பௌத்த மக்களும் உடந்தை இல்லை என்பதை இது எடுத்துக்காட்ட கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இலங்கைக்கான எகிப்திய தூதுவர் ஒரு சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது .அது மட்டுமல்லாமல் இலங்கை தூதுவரும் இங்குள்ள முஸ்லிம்களோடு நல்ல முறையில் நடந்து வருவதும் இங்க குறிப்பிட வேண்டிய விடயமாகும் .
இலங்கை தூதரகத்தினால் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இலங்கை அல் அஷ்ஹர் பல்கலைக்கழக மாணவர்கள் மிக விருப்பத்தோடும் , உற்சாகத்தோடும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் .இது முஸ்லிம்கள் மாற்று மதத்தினரோடு எந்தளவு மன சுத்தியோடு நடந்து கொள்கிறார்கள் என்ற ஒரு நல்லனத்தை பௌத்த மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
இது வெளிநாட்டில் வாழும் இலங்கை மக்கள் இன, மத பேதம் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் .
Post a Comment