பொது மக்களுக்கு மட்டுமா சட்டம், பொலிஸாருக்கு இல்லையா..?
(அப்துல்சலாம் யாசீம்)
சட்டங்கள் உருவாக்கப்படுவது பொதுமக்களின் நேர்த்தியான வாழ்வினை உறுதி செய்வதற்காகவே. சட்டத்தையும் நியாயத்தையும் காப்பதற்காகவே சீருடை அணிந்த பொலிஸார் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் சட்டம்,மற்றும் ஒழுங்குகளை பேணி நடப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் தான் இந்த பொலிஸ் அதிகாரிகள். அதாவது போக்குவரத்து அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு அடையாளக்குறியீடுகள் வீதிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி ஒழுங்குகள் போடப்பட்டு வருகின்றது. வீதி ஒழுங்குகளை பொதுமக்கள் பேணி நடக்க வேண்டுமாக இருந்தால் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பொலிஸார் இவற்றை முதலில் பேணி நடக்க வேண்டும.
இது இவ்வாறிருக்க திருகோணமலை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள கடை தொகுதிகளுக்கு செல்பவர்கள் கடைகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தி விட்டுச்சென்றால் அவ்வாகன உரிமையாளர்களுக்கு எதிராக குற்றத்திற்கான தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றது. வரவேற்கத்தக்கது!
ஆனாலும் அக்கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் வழங்கும் பொலிஸார் அதே பக்கமாக பிரதான வீதியில் தனது போக்குவரத்து கடமைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு குற்றப்பத்திரம் வழங்குவதை படத்தில் மூலம் காணலாம்.இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரிகளுடைய படத்தை படம் பிடித்ததற்காக தனது கடமைக்கு பங்கம் விழைவித்ததாக கூறி ஊடகவியலாளருடைய தேசிய அடையாள அட்டையை பெற்று அவருடைய விபரம் திரட்டப்பட்டதுடன் தனக்கு (ஊடகவியலாளருக்கு) எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அக்கடமையில் இருந்த பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு வீதி ஒழுங்குகளை ஊக்குவிக்கும் பொலிஸார் குறித்து தெரியப்படுத்தவே படங்கள் எடுக்கப்பட்டது. இருந்தும் ஊடகவியலாளருக்கு வழக்கு தாக்கல் செய்யவே பொலிஸார் விபரம் திரட்டினர்.
மோட பொலிஸ் காரங்களுக்கு எங்கே விஷயம் புரிய போகுது!
ReplyDeleteIntha government aatchiyila ithellam sakamappa
ReplyDeleteNaanellam eththana thadava than kasu kodukkirathu enga trinco people ku ithellam palahittu
Onnu theriuma worldla ulla uniform pota ore pichchai kararhal Sri Lanka vil than irukkanga mele ulla padaththil parkalam
police seythal kuttam illai but pothumakkal seythal kutram
ReplyDeleteதம்பி நீங்க அஞ்ச வேண்டாம் உங்களுக்கு எதிராக வழக்கு தொடர அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை தவறு என்றால் அது வாப்பா செய்தாலும் தவறுதான்... அந்த பொலீஸ் காரா் சட்டரீதியாக கிழிக்க ஒன்றும் முடியாது சும்மா பந்தா காட்டி இருக்கிறான்.அவன் வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் முறை பிழையானது நண்பா நீ உனது நோ்மையை தொடர்ந்து செய் நண்பா..
ReplyDeleteநண்பா இச்செயற்பாடு குறித்து பொலிசாருக்கு எவ்வித வழக்கு தொடர்வதற்கான நியாயமும் இல்லை உனது நேர்மையான செயற்பாட்டுக்கு முன் அவை தோற்றுப்போகும் நண்பா பொலிஸ் காரன் பந்தா காட்டி இருக்கான் அவரால ஒன்றும் கிழிக்க முடியாது...
ReplyDeleteIntha maathiri oru sampavam enaku nadanthathu. naan kalmunail mosque itku sendru thirumpum poothu motor cycle oppposite pakamaha parkpannividu start panni sattu 20m thuuram vantha pirahu enaku penalty adthaarhal antha valiaal cycle drive pannivantha inoruvarai pidithu summa viddaarhal athai naan kedathatku intha bloody police ennidam sonnarhal saddam avarhaludaiathaam thaangal ninaitha mathirithaan duty saivoom endru sonna thalakennam pidutha policethaan namathu naadil irukum police.
ReplyDeletetake a deep look at road sign its a single red cross so vehicle can stay with engine start when its double cross v can't stop vehicle when engine start or stopped think be for publish the news
ReplyDelete