தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தரவை நிறைவேற்றும் ஹரீஸ் எம்.பி.
(ஏ.சீ.எம்.றியால்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவரவர் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டதன் பிரகாரம்திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழூ தலைவருமாகிய ஹரீஸ் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஹியாகான் மற்றும் பல அதிகாரிகள் சகிதம் சென்றிருந்தனர்.
அட்டாளைச்சேனை மக்களை சந்திக்கும் நிகழ்வு மாகாண சபை உறுப்பினர் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய குழூ உறுப்பினர்கள் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு இடம்பெற்றுவரும் அநியாயங்கள் சம்பந்தமாக அவர்களுடைய ஆதங்கங்களை தெரிவித்ததோடு, கடந்த காலங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கீடுகள் செய்த ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு இம் முறையும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் மையவாடி சுற்றுமதில் அமைப்பதற்கும் மற்றும் அட்டாளைச்சேனை மத்திய கல்லுரியின் அபிவிருத்திக்கென கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு செய்வதாக இணங்கிக்கொண்டார்.
அடுத்து பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை தவிசாளர் வாஸீத் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டதோடு, மண்மலை பிரச்சினை சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார். மேலும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகையினை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.
மேலும் இறக்காமம் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்களை சந்திக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் நைசர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வரிப்பத்தான்சேனை 03 குறிச்சி மகளிர் சங்கத்திற்கு ஒரு தொகை தையல் இயந்திரங்கள் வழங்கியதோடு, அப்பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதாகவும் இணங்கிக்கொண்டதோடு, இறக்காமம் மத்திய குழூ உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கிக்கொண்டார்.
சகோதரர்களே மேலே உள்ள படங்களை சற்று உற்று நோக்குங்கள்! மிகவும் பொருத்தமான படங்கள்.
ReplyDelete"ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டாராம்: ஒவ்வொரு மாதமும் அவரவர் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும்"
***அப்படியானால் இத்தனை நாளும் நீங்கள் யாரும் மக்களிடத்தில் இதுகாலவரைக்கும் போகவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்*** அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது பொட்டோவில் பதிந்திருக்கும் உங்கள் முகங்கள்!
1. ஹரிஸ் வாய் அடைத்து, சந்தோசம் கலைந்து, என்ன செய்வது என்று யோசிக்கிறார்!
2. நசீர் அவர்கள், "என்னத்த போயி? என்னத்தக் கேக்கிற? என்ற பாணியில் முகத்தில் களை இழந்ந்து, சுதியற்று முகம் கோணி இருக்கிறார்!!!
3.மூன்றாவது, இருகளர் சட்டை அணிந்தவர்: இதெல்லாம் நடக்கிற கதையா? என்று தனக்குளே கேட்டுக்கொண்டு, வேறு யோசனையில் இருக்கிறார்.
4.பொது மக்களில் சிலர் இரண்டாவது படத்தில், இது பழைய "ஜோக்" சிரிப்பு வரவில்லை - புதியதொன்று சொல்லுங்களேன் என்பது போல்- முகங்களைத் திருப்பிக்கொள்கிரார்கள்.
--------------------------
எங்கே தவத்தம்பியைக் காணவில்லை? முறுகிற்றேளோ?
கவனம்! ஆசாத் சாலியுடனும் பேசுவதாகத் தகவல்!!!
Mr Haris ningal thiramayana,thudipana MP ningal SLMC udanirunthingal enral ungalin thiramaigal ellam veli ulahidku thariyamal poividum
ReplyDeleteACMC leader Hon Rizad Bathiudeen udan sernthal enna?