அமைச்சர் அதாவுல்லாவை பார்த்து முபாரக் மௌலவி கேட்கிறார்...!
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுள்ளா சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார்-முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத.
பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுள்ளா சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
அமைச்சர் அதாவுள்ளா மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பேசுவதற்காகவே மக்கள் தமது பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் பற்றி ஒரு சொல்லேனும் பேசாத அதாவுள்ளா ஹக்கீமை போன்று கிழக்குக்கு வந்ததும் பயில்வான் வீரம் பேசியுள்ளார். தான் பேச வேண்டிய இடத்தில் பேசியதாக கூறும் இவர் அவ்வாறு அவர் பேசி எதனை சாதித்தார் என ஒன்றையாவது கூற முடியுமா? அவ்வாறாயின் இவரது பேச்சு எடுபடாத இடத்தில்தான் இவர் பேசியுள்ளார் என தெரிகிறது. பேச்சு எடுபடாத இடத்தில் பேசுவது யார் என்பது உலகுக்கு தெரியும். இவர்கள் சில இடங்களில் பேசியதாக வந்த செய்திகள் இவர்களாகவே ஊடகங்களுக்கு சொன்னவைதானே தவிர ஊடகவியலாளர்களால் திரட்டித்தந்தவை அல்ல. அமைச்சரவை கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது பொது மக்களுக்கு தெரியாது என்பதால் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
பொதுபலசேனாவின் உள்ளார்ந்தமும் அவர்களின் கருத்துக்களும் எமக்கத்தெரியாது என்றும் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றும் தமக்குத்தெரியாது என முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி போல் இவரும் கூறியுள்ளதன் மூலம் எந்தளவுக்கு இவர்களின் அறிவு எலும்புத்துண்டுக்கு மயங்கிப்போயுள்ளது என்பது தெரிகிறது. அனைத்து சேனாக்களின் பின்னாலும் யார் சேனாதிபதி என கொழும்பில் வாழும் மனோ கணேசன் பகிரங்கமாக கூறும் போது கிழக்கை சேர்ந்த அதாவுள்ளாவுக்கு தெரியாது எனக்கூறுவது கேவலமானதாகும்.
அரசு, பொதுபல சேனா என்ற அம்பு மூலம் ஐந்து விடயங்களை சாதித்துக்கொண்டுள்ளது. ஹலாலை கப்றுக்குழியுள் வைத்து விட்டது. முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயா அணிவதில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. ஜெய்லானி மற்றும் தென்னிலங்கை பள்ளிவாயல்களுக்கான பாதுகாப்பு இல்லாமலாக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களின் வர்த்தகம் சிதைக்கப்பட்டு விட்டது. பொத்துவிலில் சிலை வைக்கப்பட்டு விட்டது. இவை அத்தனையும் ஒரு சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இவை முடிந்ததும் பெருநாளை கொண்டாட பொது பல சேனாவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டு கிழக்கு மக்கள் ஏமாந்தவர்கள் என நினைத்து அவர்களை சமாளிக்கும் படி அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளது.
நாம் அமைச்சர் அதாவள்ளாவிடம் கேட்கிறோம். இனவாதத்தின் இந்த ஐந்து வெற்றிகளில் ஒன்றையாவது தடுத்து நிறுத்த உங்களால் முடிந்ததா? இவை எதையும் செய்யாமல் அரசில் உள்ளவர் என்ற வகையில் இந்த வெற்றிகளுக்கு துணை போய்விட்டு வெறும் கட்டிடங்களை கொண்டு வருவது என்பது ஒரு மானமுள்ள பெண்ணை நடுவீதியில் நிர்வாணமாக நிறுத்திவிட்டு அவளுக்கு புரியாணியை சாப்பிட கொடுப்பது போன்றதாகும்.
இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் தன்மானம் இழந்து நிர்வாணமாக நிற்கிறது. தென்னிலங்கை முஸ்லிம்கள் தலைகுணிந்து நடைப்பிணம்போல் வாழ்கிறார்கள். அவர்களால் இந்த அநியாயங்களுக்கெதிராக பேச முடியவில்லை. அவர்களின் மக்கள் பிரதிநிதிகளும் நக்குத்திண்ணிகளாகி விட்ட சூழ் நிலையில் கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுள்ளாவைப்போன்றவர்களும் சமூகத்தை காட்டிக்கொடுத்த தற்காக இறைவனிடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். தாம் நம்பியவர்களால் அநியாயம் செய்யப்பட்ட இந்த முஸ்லிம்களின் சாபம் இவர்களை சும்மா விடாது என்பதை மட்டும்தான் எம்மால் கூற முடியும்.
சகோதரர் முபாரக் அவர்களின் நிலையைப் பார்க்கும் போது, அவரும், எப்பிடியாவது ஒரு நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசைக்காகவும், அவரின் நப்ஸின் தொடர் நச்சரிப்பாலும், அவர் தன்னையே வருத்திக்கொண்டு செய்யும் அதி உச்ச பிரயத்தனங்களைக் காணும்போதும் கவலை அடைகிறேன்.
ReplyDeleteபதவிகளையும் அல்லாஹ்தான் அருள்கிறான்! படித்திருப்பாரவர். சில வேளை சிலதை அறிவு ஏற்றுக்கொண்டாலும், ஆசை அடம்பிடித்து ஏற்பதில்லை. இது ஒரு பக்கம் இருக்க, உங்கள் ஆய்வுகளும், நீங்கள் முன்வைக்கும் காரணங்களும் காரம் காணாமல் இருக்கிறது. அதில் வேறு எதோ காரியத்துக் கானதகவே தெரிகிறது.
இக்லாஸ் இன்றியமையாதது என்றிருக்கும் இக்காலத்தில், அது இயக்கமில்லாமல் கிடக்கிறது. எல்லா வற்றையும் விடுவோம்!
இந்த அரசியல் வாதிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! ஆனால் உங்களுக்குத் தெரிந்தது, அல்லாஹ் உங்களுக்கு அருளியது, அதிகமானோருக்குக் கிடைக்கவில்லை!!!! அதுதான் அந்த புனித மார்க்க அறிவு.
மதீனாவிக்கும் சென்று அதை மேலும் மெருகூட்டி, சீர்படுத்தி, சிறப்பாக கொண்டு வந்திருக்கிறீர்கள்! இத்தனை இன்பமாகக் கற்ற, இந்நிலையான கல்வி கரைந்துவிடக் கூடாது! ஆனால், நீங்கள் பெற்ற மார்க்கக் கல்வியோ அப்படியே ஒரு பிடிப்பில்லாமல், உங்களினுள் உறங்கிக் கொண்டிருக்கிறது. பெட்டகத்தினுள் இட்ட பொருட்போல, யாருமே கேட்டுவராத பெண் போல், உங்களினுள் மழுங்கி, மங்கிக் கிடக்கிறது.
தட்டி எழுப்புங்கள்! தன்னலம் களையுங்கள்! தீன் நலம் பேணுங்கள்! உங்கள் ஞானக்கண் திறவுங்கள்! நம் மக்களின் ஞானம் தட்டி எழுப்புங்கள்! அறிவளிங்கள்! மார்க்க அறிவளிங்கள்! ஒற்றுமைப் படுத்துங்கள்! ஒருமைக்குள் கொண்டு வாருங்கள்! ஓதப் பழக்குங்கள்! ஒழுக்கம் ஓம்பப் பழக்குங்கள்! இனஇறுக்கம் பேணச் செயுங்கள்! மனஇறுக்கம் களையச் செயுங்கள்!
இவைகள்தான் மார்க்க அறிவு படைத்தர்களுக்கான பொறுப்புகள். பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்க்கலாம், ஆனால் நல் மார்க்க நெறியை சமூகத்தில் நட்டு, போஷித்து, வளர்க்க வேண்டியவர்கள் மார்க்க அறிவு படைத்தர்கள்!
இதை விடுத்து இந்த அரசியல் சாக்கடையில் தானாகவோ அல்லது யாரோ பிடித்து தள்ளி இருக்கிறார்கள். இச்சாக்கடையை நாங்கள் துப்பரவு செய்வோம்! நீங்கள் உடனடியாக இதிலிருந்து வெளியேறி, குளித்து சுத்தமாகி உங்களால் இயலுமான அல்லாஹ் அருளிய அந்த “இல்”மை இந்த இம்மைக்குப் பயன்படுத்தி நீங்களும் பயன் பெற்று, நம் சமூகமும் பயன் பெற இறைவனை வேண்டுகிறேன்! ஆமீன்!
நவீன சிந்தனைப்படி இந்த அமைச்சர்கள் பதவிகளுக்காக சமூகத்தின் கலாசார உரிமைகளை விலைபேசும் கோடரிக்காம்புகள் என்றுதான் சொல்லவேண்டும்.
ReplyDeleteஇதற்கு சரியான தீர்வு உலமாக்களின் பலப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியே களத்தில் இறங்க வேண்டும்.
mowlavi neenke yaridem mothip parkkureenke nalla yositthu parttheenkela eppowawethu akkarai pattukku pore welai illaiya entu?
ReplyDeleteமௌலவி முபாரக் அவர்கள் உலமா கட்சி என்ற பெயரில் அரசியல் செய்வதில் கிஞ்சித்தும் தயங்காத ஒரு நபர். இவரிடம் கற்றுக் கொண்டே பிக்குகளும் தங்களுடைய காவியுடையினை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதற்கு துனிந்துள்ளனர். தலைவனும் தானே தொன்டனும் தானே என்ற நிலையில் உள்ள கட்சியினை வைத்துக் கொண்டு அதாஉல்லாஹ் போன்ற பெரும் தலைவனை தூற்றுவது வினோதமாக உள்ளது.
ReplyDeleteஅதாவல்லாஹ் சேரை பற்றி போசுவதற்கு தகுதி உங்களுக்கு உள்ளதா? தீனை மக்களுக்கு பரப்பினால் கூட நல்ல பயன் இருக்கிறது மௌலவி.
ReplyDelete