Header Ads



ஒரு முஸ்லிம் என்கிற முறையில் எத்தகைய வாழ்வை நீங்கள் விரும்புவீர்கள்..?



(இப்திகார் இஸ்லாஹி)

ஒரு பத்திரிகையின் நேர்காணலில் குர்ரம் முராத் கூறிய பதில்..! 

ஒரு முஸ்லிம் என்கிற முறையில் எத்தகைய வாழ்வை நீங்கள் விரும்புவீர்கள்..?

நான் ஒரு முகம் தெரியாத, மௌன உழைப்பாளியாக, ஊழியனாகவே வாழ விரும்புவேன். 

எத்தகைய ஊழியராகவெனில் உறுதியுடனும் சமநிலை தவறாமலும், நீதி நியாய உணர்வுடனும், நிலைகுலையாமலும், அழகிய பொறுமையுடனும் தொடர்ந்து இடைவிடாமல் ஓயாமல் ஒழியாமல் தொய்வின்றி இறைவழியில் பாடுபடுகின்ற ஊழியனாகவே இருக்க விரும்புகின்றேன்.

அந்த ஊழியனை நீங்கள் பத்திரிகைச் செய்திகளில் பார்க்க மாட்டீர்கள். தொலைக் காட்சித் திரையில் அவனது முகம் தோன்றாது. பிறர் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் என்கிற ஆசை அவனுக்குக் கிஞ்சிற்றும் இருக்காது. புகழுரைக்காக அவன் ஏங்கவும் மாட்டான். அவன் ஒரு அடிப்படையான ஊழியனாக இருப்பான். 

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என ஊகங்கள், சந்தேகங்களில் அவன் தனது நண்பர்களைத் துளைத்தெடுக்க மாட்டான். மனம் சஞ்சலமடையச் செய்யவும் மாட்டான். 

எந்தவொரு தோல்வியும் பின்னடைவும் அவனைத் துவளச் செய்யாது. வெற்றி கிடைத்தாலும்கூட கடமையை வெற்றிகரமாகச் செய்ததாக, பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக அவன் நினைப்பான். 

அப்படிப்பட்ட ஊழியனாக இருக்கவே, வாழவே நான் விரும்புகின்றேன்.

4 comments:

  1. Manas!!! do you know reading makes a man full.first do that then criticise others.dont follow illiteral ulamas.i couldn't get tamil type setting other wise i would have ..................u.

    ReplyDelete
  2. முகம் தெரியாத ஊழியரின் முகம் எப்படி மீடியாவில் .....? விளம்பரமோ?

    ReplyDelete
  3. Dear Admin ,
    குற்றம் முராத் பற்றிய ஒரு அறிமுக குறிப்பை முதலில் இடுங்கள்.
    அவரின் வாழ்க்கை, அவர் வாழ் நாள் சாதனைகள், அவரினால் நேர்வழி பெற்றோர்கள் ,
    அவரின் ஆழமான எழுத்தாற்றலால் இப்போதும் நேர்வழி அடைவோர்கள் பற்றி சிறிது குறிப்பிடுங்கள் .

    கிணற்றுத்தவளைகளே !!!!!!!!

    அவரின் ஒரு நாள் வாழ்க்கைக்கு ஈடாகுமா? உங்கள் முழு வாழ் நாளும் ..

    விமர்சிப்பதற்கு முதல் அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .......

    அல்லாஹ் எம் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும் .....

    ReplyDelete

Powered by Blogger.