Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - பிரித்தானியா கவலை


முஸ்லிம்களின் பிரதேசங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. பெளத்த தேரர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தம்புள்ளை நகரில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கையில் சிறுபான்மையினருக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதன் பின்னால் பொதுபலசேனா எனும் தேசிய வாத குழு செயற்படுவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் நேற்று வெளியிட்ட  மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் இலங்கையின் மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் பகுதியிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் மத சார்பான வன்முறைத் தூண்டல்கள் அதிகரித்துள்ளன. குறித்த ஆண்டில் மட்டும் இது தொடர்பிலான 52 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனை விட முஸ்லிம்களின் பிரதேசங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. பெளத்த தேரர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தம்புள்ளை நகரில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுவரை இவ்வாறான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இவ்வாறான மத ரீதியான பிரச்சினைகள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனை பொதுபலசேனா என்றதேசியவாதக் குழு அரங்கேற்றுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை தொடர்பில் ஆராயும் குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


3 comments:

  1. Hi U.K.....hahaha... try to protect ur marathon race on Sunday from these muslims.

    ReplyDelete
  2. @Mahandren, mind ur words..do u knw who did that attack on u.s? Still too f.b.i investigating it...how can u say it did by muslims aah?u r a ethnic gater...

    ReplyDelete
  3. @jaffna muslim
    நாங்கள் இரவிரவா விழித்திருந்து பின்னூட்டல் செய்யும் சில முக்கிய பின்னூட்டல்கள் (நியாயமான காரணம் இருக்கலாம்) பதியப்படுவதில்லை. அதேவேளை மன நோயாளிகளின் (மகேந்திரன் போன்றோர்) பின்னூட்டல்கள் தடங்கலில்லாமல் வருகிறது.
    சரி சரி இவர்கள் பற்றி நாங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் தானே!!!

    ReplyDelete

Powered by Blogger.