முஸ்லிம் குடியிருப்புக்கள் மீது திடீர் தீ - நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்வு
(மொஹமட் மஹ்தூம்)
ரோஹிங்கிய செய்தி நிறுவனம்: மியன்மார் மண்டலாய்ப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் குடியிருப்புக்கள் மீது ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பாங்கூன் நகரத்தின் வடக்கே இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே வேலை பல முஸ்லிம் உயிர்களை காவு கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களை இழந்து கூடாரங்களில் வாழவேண்டிய நிர்கதி நிலைக்கு தள்ளிய முஸ்லிம்களுக்கு எதிராக முடக்கி விடப்பட்ட பரந்தளவிலான கலவரத்திற்கு தூண்டுதலாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்கள் மீது மாத்திரம் சிறை பிடிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்திற்கான காரணி கண்டறியப்படவில்ல என மியன்மார் அதிகாரிகள் தெரிவித்த போதும், பௌத்த தீவிர வாதிகளால் வேண்டுமன்றே இந்த தீ மூட்டப் பட்டுள்ளதாகவே முஸ்லிம்கள் பலரும் நம்புகின்றனர் என அங்கிருந்து வரும் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக மியன்மாரில் "969" என்ற பௌத்த பிக்குகளின் தீவிரவாத அமைப்பின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
bodu balu senaum edathan srilankala panna pohudu
ReplyDelete