இலங்கையில் - பிரிட்டிஷ் விமான சேவை மீண்டும் ஆரம்பம் (படங்கள்)
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
15 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான ‘பிரிட்டிஷ் எயாவேய்ஸ்’ விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு 1990 ஆண்டுமுதல் இச்சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இன்று (15) திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான சேவை அதிகாரிகளை வரவேற்றார்.
அங்கு அமைச்சர் உரையாற்றுகையில்,
பிரிட்டிஷ் எயாவேய்ஸ்’ நிறுவனம் இலங்கையின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே இச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுளதெனக் கூறினார். இச்சேவையினால் இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறை மேலும் அபிவிருத்தியடையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்புக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் திங்கள்- புதன் - வெள்ளி ஆகிய நாட்களில் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்த இந்த விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்னுமொரு முக்கியமான விடயம் நாம் அனைவரும் மனதில் கொண்டு செயல்படவேண்டியுள்ளது. கட்டுனாயக்க சர்வதேச விமான நிலையம் அண்மையில்தான் அழகானமுறையில் புதிய முறையில் விஸ்திரணிக்கப்பட்டது ஜனாதிபதியின் ஊரில் புதிய விமான நிலையம் திறந்துவைப்பதற்காகவும் அவ்விமான நிலையத்தை கட்டுனாயக்கவைவிட பெயர்சொல்லக்கூடிய வகயில் முன்னேற்றும் நோக்க்த்துடன் தற்போது கட்டுனாயக்க விமான நிலையத்திற்கு சகல விதத்திலும் அரசியல் அராஜகத்துடனனான போக்கில் அனீதி இழக்கப்பட்டு மிகவும் அத்தியாவசியமான் இயந்திரசாதனங்களும் இதர செய்ற்பாட்டுக்குரிய பொருட்டளும் சுயனலத்திற்காக புதிய விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டதன் விழைவாக பழைய விமான நிலையம் பல அசெளகரியங்களையும் எதிர்னோக்கிவரும் நிலையிலுள்ளது, ஆக இதுவும் ஒரு கொள்ளயடி சம்பவமாகத்தான் பலரும் கருதுகின்றார்கள்.. இது அனைவரும் தெரிந்திருக்கவேண்டிய விடயம்..
ReplyDelete