Header Ads



சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுரகம் பதில் தருமா..?


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அசமந்த செயற்பாடுகள் தொடர்பில் அங்குள்ள இலங்கை முஸ்லிம்கள் கூறும் விபரங்கள் மனதை உருக்குவதாக அமைந்துள்ளன.

சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் மிகவும் நெருக்கடிமிக்க கட்டத்தை அடைந்திருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் ஸ்கைப் மூலமாக தொடர்பை ஏற்படுத்திய சிலர் தமது கவலையை பகிர்ந்துகொண்டனர்.

தாம் சவூதி அரேபியாவில் படும் துன்பதுயரங்களுக்கு இலங்கை தூதரகமும், தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் பொறுப்புகூற வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். சவூதி அரேபியாவில் இலங்கை தூதரகம் அமைந்திருப்பதன் நோக்கம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களின் நலன் காப்பதற்கே என வாதிடும் அவர்கள், சவூதி அரேபியா பொலிஸ்காரர்களிடம் பிடித்துக்கொடுக்கும் பணியையே இலங்கை தூதரகம் தற்போது மேற்கொள்வதாக குற்றம் சுமத்தினர்.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் தாம் இலங்கைக்கு திரும்பிச்செல்ல முடியுமென வாதிடும் அவர்கள், ஆனால் இதுதொடர்பில் இலங்கைத் தூதரகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையெனவும் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை ஜப்னா முஸ்லிம் இணையமானது நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ள முயன்றது. இருந்தபோதும் நாம் பலமுறை அழைப்பு மேற்கொண்ட போதிலும் பதில் தரப்படவில்லை.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் அங்கு அவதிப்படும் இலங்கை பணியாளர்கள் குறித்து பதில் தருமா..?

4 comments:

  1. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் இலங்கை தூதரகம் அமைந்திருப்பதன் நோக்கம் தொரியாத சேர், மாத்தியா,ஐயா..வாகத்தான்யிருக்கிறார்கள். நாளை வா பிறகு வா என்பதை மட்டும்தான் வேலையாக செய்கிறார்கள். சவூதி அரேபியாவிலுள்ள எந்த ஒரு கொம்பனியும் சொல்லும் வார்த்தை....இலங்கை தூதரகமா அவர்களுக்கான பிஸ்கட் எங்களிடம் இருக்கிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகின்றார்கள்...இனிவரும் காலம்களில் அவர்களின் நடவடிக்கைகளை இலங்கைஅரசாங்கம் உற்று நோக்க .வேண்டும்.

    ReplyDelete
  2. சவுதி அரேபியாவில் இவர்களைப்போன்ற சில சகோதர்கள் படும் துன்பம் மிகவும் வேதனைக்குரியது.
    இலங்கை பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கு தகுந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது இலங்கை தூதரகத்தின் கடமைகளில் ஒன்று.
    ஆனால் அது யாருக்கு என்பதில் தான் இங்கே சிக்கல்.
    சவுதி அரேபிய சட்டத்தின் படி சட்ட சிக்கல் எதிலும் மாட்டிக்கொள்ளதவர்களுக்கு இலகுவில் உதவி வரும் தூதரகம், மேலே குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டுவதின் உள் நோக்கம் என்ன என்பதினை புரிந்து கொள்வதில் இன்னும் சிக்கல் இருக்குமா?

    ReplyDelete
  3. இலங்கை அரசே சவுதிதூதரகத்தில் மட்டும் அல்ல உலக நாடுகள் எல்லாம் இருக்கும் நம் நாட்டு தூதரகங்களில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக அவதானிப்பது உன் கடமை? தேசமக்களின் நலன் பேன அந்நிய தேசத்தில் மக்களின் வரிபணத்தில் இயங்கும் தூதரங்களும் அதன் அதிகாரிகளும் மக்களுக்கு நலன் செய்கிறார்களா அல்லது மக்களை விற்று தங்களை வளர்கிறார்களா அந்நியன் வீசும் எச்சு முள்ளுக்கு என்பதை விசாரிக்க வேண்டும்

    இதட்குறிய ஒரே தீர்வு சவுதி தூதரகத்தில் முதலாவதாகவும் ஏனைய தூதரகங்களில் அவசரமாகவும் சீ.சீ டீவி கமரா பொறுத்தபட்டு அதன் நேரடி ஒளிபரப்பு நாட்டின் மக்கள் நடமாடும் அணைத்து பொது இடங்களிலும் காட்சி படுத்தபடவேண்டும் அப்போதுதான் தூதரக அதிகாரிகளின் கொட்டம் அடங்கும்?

    ReplyDelete
  4. இலங்கை தூதரகம் இங்கு லஞ்சம் வாங்கத்தான் இருக்கிறது அவர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு தடவை மட்டும் தான் வந்தனர் அதன் பின்னர் call எடுத்தால் பதில் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.