நுவரெலியாவில் மந்தம் - விஷமிகளின் குறுஞ் செய்திகளே காரணமாம்..!
கடந்த முதலாம் திகதி முதல் நுவரெலியாவின் வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ள போதிலும், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மந்த நிலை காணப்படுவதாக நுவரெலியா மாநகர சபை தெரிவித்துள்ளது. வசந்தகாலம் இந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
விஷமிகள் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகள், அவர்களில் வருகை குறைந்துள்ளமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மாநகர சபை உறுப்பினர் எம்.ஜே.எல். பளீல் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நுவரெலியாவில் உள்ள அனைத்து வாடகை வீடுகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. எனினும் இம்முறை அவை வெறுமையாக இருப்பதால், நகர சபை பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. வசந்தகாலத்தை முன்னிட்டு, பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமுமின்றி நுவரெலியாவுக்கு வரலாம் எனவும் பளீல் தெரிவித்துள்ளார்.
now the people can understand who are visiting to Nuwara Eliya ...... Nuwara Eliya Municipality can claim this from Budu Balu sena.....
ReplyDeleteCorrectly said Mohamed Rizni
ReplyDeletepara balu sena should pay any lost of income of tourism in Nuwara Eliya this time
ReplyDelete