Header Ads



யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை


யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் வர்த்தகர்கள், மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் யாழ்ப்பாண வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக 5,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை முச்சக்கர வண்டிகளில் வரும் ஒரு கும்பல் புழக்கத்தில் விட்டுவருவதாகவும், அதிகமான போலி நாணயத்தாள்கள் ஹோட்டல்கள், புடவைக் கடைகளிலேயே மாற்றப்படுகின்றன எனவும் வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, வர்த்தகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து உங்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவேண்டும் என யாழ்ப்பாண வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.