''அமெரிக்காவுக்கு இருண்டதெல்லாம் பேய்''
நியூயார்க் விமான நிலையத்தில் ‘பாம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசிய நண்பர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
நியூயார்க்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதற்காக ஜான் எப் கென்னடி விமான நிலையத்துக்கு ஜேசன் மைக்கல் குருஸ், மேத்யூ ஒகுமோட்டோ என்ற 2 நண்பர்கள் வந்தனர். எஸ்கலேட்டரில் (நகரும் மாடிப்படி) நின்றபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருஸ் தனது நண்பரிடம் ‘பாம் சாண்ட்விச் சாப்பிட்டிருக்கிறாயா?’ என்று கேட்டார். அவர்கள் அருகில் நின்றிருந்த போக்குவரத்து பாதுகாப்பு பெண் அதிகாரி காதில் இவர்களின் பேச்சு விழுந்தது. ‘பாம்’ என்ற வார்த்தை மட்டும் அவர் காதில் விழுந்தது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உஷாரான அதிகாரிகள் விரைந்து சென்று நண்பர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர்.
இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததுடன் ‘பாம் பற்றி என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?’ என துருவி துருவி விசாரித்தனர். ‘பாம் சாண்ட்விச்’ பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். மற்றபடி வேறு எதுவும் பேசவில்லை என்றனர். விமான நிலைய போலீசாரும் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகே அவர்கள் பேசியது உணவு பண்டத்தை பற்றிய பேச்சு என்பது தெளிவானது. இதில் ‘பாம்’ என்ற வார்த்தையை மட்டும் அரைகுறையாக கேட்டுவிட்டு பெண் அதிகாரி புகார் செய்தது தெரிந்தது. விசாரணைக்கு பிறகு நண்பர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அவர்கள் செல்லவிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது. நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, சாதாரண சம்பவங்களைக்கூட பாதுகாப்பு அதிகாரிகள் சும்மா விடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை அதுதான். சாதாரண சம்பவங்களைக்கூட பாதுகாப்பு அதிகாரிகள் சும்மா விடுவதில்லை. ஆனால் நாம்தான் முஸ்லிம்களை மட்டுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறான் அமெரிக்கன் என முஸ்லிம்களைப்பற்றி வரும் செய்திகளை மட்டுமே வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறோம்.
ReplyDelete