சுவீடனில் ஹலால் உணவில் பன்றி இறைச்சி
சுவீடனில் ஹலால் இலட்சினை பொறித்து விற்கப்படும் sausages ல் பன்றி இறைச்சி சேர்க்கப் பட்டுள்ளதாக சுவீடன் உணவு பாதுகாப்பு சேவைக்கான முகவர் நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த உணவு ஸ்லோவேனியா வில் உற்பத்தி செய்யப் பட்டு சுவீடனில் விற்பனைக்காக கொண்டுவரப் படுகிறது. குறித்த உணவு சம்பந்தமாக தமது பகுப்பாய்வின் விபரத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) வழங்கி போலி ஹலால் இலட்சினை பொறித்து விற்கும் குறித்த நிறுவனம் விடயத்தில் கவனம் செலுத்துமாறு கோரவுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலையத்தின் உத்தியோகப் பூர்வ பேச்சாளர் Louise Nyholm இது பற்றி கருத்து வெளியிடுகையில்,
ஹலால் பெயரிடப்பட்ட தயாரிப்புகள் பன்றி இறைச்சி கொண்டிருப்பது ஏற்க தக்கது அல்ல. முற்றிலும் பன்றி இறைச்சி சாப்பிட விரும்பாத மக்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே நிறுவனங்கள் போலியான வழியில் விற்பனை செய்வதை தவிர்த்து பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும்.
இஸ்லாத்தின் தடையை கவனத்திற் கொண்டு அந்த உணவு வகைகளை முஸ்லிம் நுகர்வோர் தவிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
http://www.alukah.net/World_Muslims/0/53034/
Post a Comment