பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்பாட்டில் முஸ்லிம்களுக்கு சிங்கள பெருநாள் (படங்கள்)
(நாச்சியாதீவு பர்வீன்)
இலங்கை முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட துவேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தவேளை ஹிடோகம போலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் ஹிடோகம போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முஸ்லிம் கிராமமான நாச்சியாதீவு நெலுபாவ மற்றும் ரத்மல ஆகியவற்றில் வசிக்கின்ற முஸ்லிம்களுக்கான சித்திரைப் பெருநாள் நிகழ்வொன்று 14/04/2013 காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடத்தப்பட்டது.
இதில் கவர்க்குலம சத்தாதிஸ்ஸ ஹிமி பேசுகையில்,
சிங்களவர்களை போலவே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு இந்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு குழுவினர் மட்டுமே இந்த மூவினத்தினரின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் இந்த விடயத்தில் நாம் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டும்.என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மூன்று முஸ்லிம் ஜும்மா பள்ளி வாயல்களினதும் தலைவர்கள் மற்றும் பாடசாலை பிரமுகர்கள் முஸ்லிம் சிங்கள் பொது மக்கள் என சுமார் 500 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
நாம் அனைவரும் இலங்கையின் வலுவான ஒற்றுமை மற்றும் சந்தோஷமாக வாழ வேண்டும்.
ReplyDeleteபொதுபலசேனா பயப்படும் படியா இருக்கிறது?இவை உலமாக்கள் அல்லவா பயப்படனும்! பொதுபலசேனாவே பயப்பட வேண்டாம் முஸ்லிம்கள் உங்கள் பௌத்தத்தை பாதுகாப்பார்கள்!
ReplyDelete