அமெரிக்க குண்டுத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - தலிபான்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த தாக்குதலக்கும் எங்கள் இயக்கத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தானில் செயல்படும் திக்ரிக்- இ-தலிபான் அமைப்பினர் கூறியுள்ளனர்.
பாஸ்டனில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 3 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர். பலரது கால்கள் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் கால் இழந்த நிலையில் இருந்த சவுதியை சேர்ந்த ஒருவனிடம் அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் திக்ரிக்- இ- தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் நடந்த குண்டு வெடிப்புக்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லை. இது தொடர்பாக விரிவான விளக்கத்தை விரைவில் வெளியிடவுள்ளோம். யாரால் எந்த சம்பவம் செய்யப்பட்டது என்று பொறுப்பேற்கும்போது தான் தெரிய வரும்.
Post a Comment